சூரிய கிரகணத்தின் மையப் புள்ளியான திருப்பூர் மாவட்டத்தில் மேக கூட்டங்கள் ஆல் வளைய சூரிய கிரகணத்தை காண முடியாமல் வானியல் நிபுணர்கள் பள்ளி மாணவ மாணவிகள் ஏமாற்றம்.

வானில் நிகழும் அதிசய நிகழ்வான சூரிய கிரகணம் திருப்பூர் மாவட்டம் அவிநாசி மையப் புள்ளியாகக் கொண்டு நிகழ்ந்துள்ளது. எனவே வளைய சூரிய கிரகணத்தை காண திருப்பூர் மாவட்டத்தின் பல்வேறு பள்ளிகளிலும் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது.

நாட்டின் முக்கிய வானியல் நிபுணர்கள் சிறப்பு தொலைநோக்கி மற்றும் வானியல் கருவிகளுடன் திருப்பூரில் முகாமிட்டு இருந்தனர். திருப்பூர் சுப்பையா மெட்ரிக் பள்ளியில் சூரிய கிரகணம் காண ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது.

தமிழ்நாடு அஸ்ட்ரானமிக்கல் சொசைட்டி சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த இந்த அதிசய நிகழ்வை காண ஏராளமான பள்ளி மாணவ மாணவிகளும் பொதுமக்களும் காத்திருந்த நிலையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டதால் வளைய சூரிய கிரகணத்தினை காண முடியாத நிலை ஏற்பட்டது இதனால் வானியல் நிபுணர்கள் மற்றும் மாணவ மாணவிகள் பொதுமக்கள் என ஏமாற்றமடைந்தனர் எனினும் திருப்பூர் மாவட்டம் குண்டடம் பகுதியில் சில நிமிடங்கள் மேகக் கூட்டம் வழிவிட்டதையடுத்து சூரிய கிரகணம் காணக்கிடைத்தது.