நள்ளிரவில் அறுவை சிகிச்சை - சிறுவனின் கையை‌ காப்பாற்றிய அரசு மருத்துவர்கள்

தென்காசி அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் அறுவை சிகிச்சை சிறுவனின் கையை‌ காப்பாற்றிய அரசு மருத்துவர்கள்



தென்காசி அரசு மருத்துவமனைக்கு கை முறிந்த நிலையில் சிகிச்சைக்கு வந்த ஏழை
சிறுவனுக்கு நள்ளிரவில் அறுவை சிகிச்சை செய்து கை முறிவு சரிசெய்யப்பட்டது.
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகேயுள்ள வீராணம் கணபதி நகரைச் சேர்ந்தவர் பேச்சிமுத்து. இவரது மகன் மாரிச்செல்வம் (வயது 9). இச்சிறுவன் கீழே விழுந்ததில் வலது கையில் எலும்பு முறிவு ஏற்பட்டது. இதனால் மாரிச்செல்வம் தென்காசி அரசு மருத்துவமனைக்கு இரவு சிகிச்சைக்காக கொண்டு வரப்பட்டார். அவரது கையை தென்காசி மாவட்ட தலைமை மருத்துவமனையின் தலைமை மருத்துவர் டாக்டர் ஜெஸ்லின் பார்வையிட்டார். அப்போது அந்த சிறுவனுக்கு  உடனடியாக அறுவை சிகிச்சை செய்து எலும்பு முறிவை சரி செய்யாவிட்டால் அவரது கை பாதிப்பு ஏற்பட வாய்ப்பு இருக்கிறது என்பதை அறிந்தார். அந்த சிறுவனுக்கு  உடனடியாக  அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் என்பதை உணர்ந்து டாக்டர் ஜெஸ்லின்  உடனடியாக இரவோடு இரவாக அறுவை சிகிச்சை மேற்கொள்ள உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. டாக்டர் .ஜெஸ்லின்  டாக்டர் . மது மயக்கவியல் டாக்டர் ராஜேஸ்வரி டாக்டர்  மாரிமுத்து ஆகியோர் விபத்து சிகிச்சை பிரிவு செவிலியர்கள்
உதவியோடு இரவோடு இரவாக அறுவை  சிகிச்சை மேற்கொண்டு சிறுவனின் கை சரி செய்யப் பட்டது. இந்த உயரிய அறுவை சிகிச்சைக்கு பின்னர் தற்போது அந்த சிறுவனின் வலது கையில் ரத்த ஓட்டம் சீராக இயங்குகிறது இரண்டு எலும்புகளும் கம்பிகள் பொருத்தி சரி செய்யப்பட்டுள்ளது. சரியான நேரத்தில் அறுவை சிகிச்சை செய்து சிறுவனின் கையை காப்பாற்றிய தென்காசி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை தலைமை டாக்டர் ஜெஸ்லின் மற்றும் அனைத்து  டாக்டர்களுக்கும் செவிலியர்களுக்கும் சிறுவன்  தந்தை  பேச்சிமுத்து அவரது உறவினர்கள் நன்றி தெரிவித்தனர்.


இதுபற்றி டாக்டர் . ஜெஸ்லின் கூறும் போது இது போன்ற உயரிய அறுவை‌ சிகிச்சைகள் பெரிய மருத்துவ கல்லூரி மருத்துவமனைகளில் மட்டுமே நடைபெறும். ஆனால் அப்படிப்பட்ட உயரிய அறுவை சிகிச்சைகள்  தற்போது தென்காசி மாவட்ட அரசு மருத்துவ மனையிலும் நடைபெறுவது என்பது  இந்த பகுதி மக்களுக்கு மிகவும் மகிழ்ச்சியான செய்தி தான். இது போன்ற உயரிய அறுவை சிகிச்சையை மேற்கொள்ள தென்காசி அரசு மருத்துவ மனையின்அனைத்து மருத்துவர்களின் ஒத்துழைப்பும்
செவிலியர்களின் ஒத்துழைப்பும் தமிழக அரசின் முதலமைச்சர் காப்பீடு திட்டமுமே காரணம். இதுபோன்ற உயரிய அறுவை சிகிச்சைகள் அனைத்தும் தற்போது தென்காசி மருத்துவமனையிலேயே  செய்திட தேவையான அனைத்து வசதிகளும் உள்ளது. எனவே பொதுமக்கள் அனைவரும் அந்த வசதியை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டார்.


Previous Post Next Post