ஜமாத்துல் உலமா சபை மற்றும் அனைத்து ஜமாத்தார்கள் சார்பில் கடையடைப்பு கண்டன பேரணி

பழனியில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஜமாத்துல் உலமா சபை மற்றும் அனைத்து ஜமாத்தார்கள் சார்பில் கடையடைப்பு கண்டன பேரணி மற்றும் போராட்டம் நடைபெற்றது.


 


பழனி பேருந்து நிலையம் மயில் ரவுண்டானா அருகில் மத்திய அரசு குடியுரிமை திருத்தச்சட்டத்தை அமல்படுத்தியதை தொடர்ந்து நாடு முழுவதும் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. குறிப்பாக குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக போராடிய மாணவர்கள் மீது போலிஸார் தாக்குதல் நடத்திய சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்நிலையில் குடியுரிமைச் சட்ட திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு அரசியல் கட்சிகள்,அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில் பழனி மயில் ரவுண்டானா அருகில் பழனி வட்டார ஜமாத்துல் உலமா சபை மற்றும் அனைத்து வட்டார ஜமாத்தார்கள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் பேரணி மற்றிம் கடையடைப்பு நடைபெற்றது.



இந்தப் ஆர்ப்பாட்டத்தில் ஒவ்வொரு கட்சி பொருப்பாளர்களும் தங்கள் கண்டன பதிவை பதிவு செய்தனர்.இந்த ஆர்ப்பாட்டத்தின் தலைமையாக முஸ்லீம் பரிபாலன சங்க துணை தலைவர் கைசர் வரவேற்புரையாக அமானுல்லாஹ் மற்றும் கண்டன உரையாக கம்யூனஸ்ட் பாலபாரதி,திமுக செந்தில்குமார்,திமுக வேலுச்சாமி,விசிக கனியமுதன்,தேசியலீக் பாபு,மஜக சாந்து முகமது,யூத்லிக் யூனுஸ்,எஸ்டிபிஐ பைஜி,அரபிக் கல்லூரி ஆதம்பாஷா,மமக பரூக்,வக்பு வாரிய ஹதர்அலி,இமாம் உபைதூர் ரகுமான்,ஆகியோர பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநில பொதுச் செயலாளர் ஹாலித் முகமது கண்டன உரையாற்றினர்.இந்நிகழ்வில் அனைத்து அரசியல் கட்சி பிரமுகர்கள் சமூக ஆர்வலர்கள் உள்ளிட்ட இரண்டாயிரத்துக்கும்  மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.


Previous Post Next Post