குற்றாலம் அருவிகளில் தண்ணீர் வரத்து தாராளம் சுற்றுலா பயணிகள் ஐயப்ப பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பு
குற்றாலம் அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகாமாக இருப்பதால் சுற்றுலா பயணிகள் மற்றும் ஐயப்ப பக்தர்களின் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. தென்காசி ,குற்றாலம், செங்கோட்டை ,கடையநல்லூர் , பாவூர்சத்திரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. குற்றாலம் மலைப் பகுதிகளில் தொடர் மழை காரணமாக அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்தது. மெயின் அருவி, பழைய குற்றால அருவி, புலி அருவி, ஐந்தருவி, சிற்றருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் தண்ணீர் வரத்து தாராளமாக இருந்தது. இதனால் சுற்றுலா பயணிகள் மற்றும் ஐயப்ப பக்தர்கள் மகிழ்ச்சியுடன் அருவிகளில் குளித்தனர். நேற்று விடுமுறை தினம் என்பதால் சுற்றுலா பயணிகள், ஐயப்ப பக்தர்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது . இயற்கை சூழலும் மிக ரம்மியமான நிலையாக மாறியது. இது சுற்றுலா பயணிகளுக்கு கூடுதல் உற்சாகத்தை அளித்தது. குற்றாலம் வந்த சுற்றுலா பயணிகள் செங்கோட்டை குண்டாறு அணை, மேக்கரை அடவிநயினார் அணை ஆகிய பகுதிகளுக்கும் சென்று அணைகளில் நீர் நிரம்பி தண்ணீர் மறுகால் வழியே வழிந்தோடும் காட்சியை கண்டு ரசித்தனர்.