சத்தியமங்கலத்தில் குடியிருப்பு பகுதிகளில் வரும் டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து பெண்கள் போராட்டம் புதிய கடைக்குள் அமர்ந்து போராட்டம் நடத்தியதால் பரபரப்பு.
சத்தியமங்கலம் டு மைசூர் தேசிய நெடுஞ்சாலை அரசு போக்குவரத்து பணிமனை சுற்றுச்சுவர் அருகே தனியாருக்கு சொந்தமான இடத்தில் காந்திநகர் பகுதியில் உள்ள 300 குடியிருப்புகளுக்கு நடுவே டாஸ்மார்க் கடை திறக்க அரசு முடிவு செய்திருந்தது இந்த கடை அருகே பேருந்து நிறுத்தம் உள்ளது புதிய டாஸ்மார்க் கடை வழியாகத்தான் பள்ளிக்குழந்தைகள் உள்பட பெண்கள் நடமாடி வருகின்றனர் இந்நிலையில் இங்கு டாஸ்மாக் கடை அமைக்க கூடாது என மாவட்ட ஆட்சியர் காவல் கண்காணிப்பாளர் டாஸ்மாக் மேலாளர் உள்ளிட்ட அனைத்து அரசு அதிகாரிகளுக்கும் மனு அளித்தனர் அதிகாரிகளும் அனுமதி தர மாட்டோம் என உறுதி அளித்தனர் இந்நிலையில் இன்று காலை திடீரென அரசு போக்குவரத்து பணிமனை உள்ள இடத்தில் புதியதாக டாஸ்மார்க் கடை திறக்க அதிரடியாக புதிய கடை ஒன்று அமைக்கப்பட்டது இன்று இரவு டாஸ்மாக் கடை திறக்க போவதாக தகவல் பரவியது இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி பெண்கள் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்டோர் பார் அமைக்கும் வேலையில் ஈடுபட்டு இருந்த வேலை ஆட்களை விரட்டி அடித்தனர் பிறகு கடைக்குள் அமர்ந்திருக்கும் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர் தகவலறிந்த சத்தியமங்கலம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர் மாவட்ட ஆட்சியர் தகவல் அறிவித்துள்ளோம் கடை திறக்கப்படாது என உறுதி அளித்ததின் பேரில் போராட்டத்தை கைவிட்டனர்.