பழனி அருகே ஆயக்குடி திருமா முகாமில் அண்ணல் அம்பேத்கரின் 63 ஆவது நினைவு நாள் நிகழ்ச்சி நடைபெற்றது.
பழனி அருகே உள்ள ஆயக்குடி திருமா முகாமில் சட்ட மாமேதை புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களின் 63வது நினைவு நாள் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சட்ட மாமேதை உருவம் பொறித்த பதாகையை வைத்து அவருக்கு மாலை அணிவித்து மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செய்தனர். மேலும் சட்ட மாமேதை இன் புகழ்பாடும் பல்வேறு கோஷங்களை எழுப்பி நினைவு நாளை கொண்டாடினர். இவ்விழாவின் தலைமையாக ஆயக்குடி பேரூர் செயலாளர் பிரபு முன்னிலையாக மாவட்ட இளைஞர் எழுச்சி பாசறை செயலர் வாஞ்சிநாதன், போர் கொடியேந்தி முத்தரசு, கணேஷ் காந்தி, வழக்கறிஞர் வாய்க்கால் துரை, ஆகியோரும் கண்டன உரையை மாவட்ட துணை செயலாளர் பாவேந்தன்,மற்றும் நிகழ்வில் கலந்து கொண்டவர்களாக அச்சு ஊடக மையம் கார்க்கி, இளைய துரை, செந்தமிழன், காட்டு ராசா, ஹன்சிராம், ரஜினி, கார்த்தி, கிருஷ்ணமூர்த்தி, ஜெகதீஷ், ஆகியோர் கலந்து கொண்டனர். மாமேதை அம்பேத்கர் அவர்கள் கடந்து வந்த பாதைகள் பற்றியும் அவர்கள் பொன்மொழிகள் பற்றியும் வாழ்வில் கடைபிடிக்க வேண்டிய குறிக்கோள்கள் பற்றியும் மத சிந்தனைகள் பற்றிய விவாதங்கள் உட்பட அனைத்து கருத்துக்களையும் தெளிவாகவும் விளக்கமாகவும் எடுத்துக்கூறினார். இறுதியாக நிர்மலா போர்கொடியேந்தி நன்றியுரை கூறி நினைவு நாள் நிகழ்ச்சியை முடித்து வைத்தார்.