திட்டக்குடியில் முதலமைச்சர் சிறப்பு குறை தீர்ப்பு விழா நடைபெற்றது.
கடலூர் மாவட்டம் திட்டக்குடி தாலுகாவிற்கு உட்பட்ட பகுதிகளுக்கான முதலமைச்சர் சிறப்பு குறைதீர்ப்பு முகாம் மற்றும் நலத்திட்டங்களை கடலூர் மேற்கு மாவட்ட கழக செயலாளரும் திட்டக்குடி சட்டமன்ற உறுப்பினருமான சி.வே .கணேசன் நலத்திட்டங்கள் வழங்கி சிறப்புரையாற்றினார். நிகழ்ச்சிக்கு விருத்தாசலம் சார் ஆட்சியர் பிரவீன் குமார் தலைமை தாங்கினார். திட்டக்குடி வட்டாட்சியர் செந்தில்வேல் வரவேற்புரை ஆற்றினார். கடலூர் பாராளுமன்ற உறுப்பினர் டி .ஆர் .வி.எஸ் ரமேஷ் முன்னிலை வகித்தார்.சிறப்பு அழைப்பாளராக மேற்கு மாவட்ட செயலாளரும் திட்டக்குடி
சட்டமன்ற உறுப்பினர்.
சி. வே .கணேசன் கலந்துகொண்டு திட்டக்குடி தாலுகாவிற்கு உட்பட்ட பயனாளிகளுக்கு நலத்திட்டங்கள் வழங்கி சிறப்புரையாற்றினார். விழாவில் ஒரு கோடியே 76 லட்சம் மதிப்பில் 1050 பயனாளிகளுக்கு முதியோர் உதவித்தொகையும் 2 கோடியே 85 லட்சத்து 23 ஆயிரத்து 872 மதிப்பில் 684 நபர்களுக்கு இலவச வீட்டு மனை பட்டாவும் 1 லட்சத்து ஏழாயிரத்து 348 ரூபாய் மதிப்பில் 10 பயனாளிகளுக்கு வேளாண்மை சார்ந்த சாதனங்களும் உட்பட மொத்தம் 4 கோடியே 12 லட்சத்து 31 ஆயிரத்து 220 ரூபாய் மதிப்பில் வழங்கப்பட்டது.
விழாவில் இன்ஸ்பெக்டர் ஸ்ரீபிரியா ,தனித்துணை ஆட்சியர் பரிமளம், மங்களூர் வேளாண்மை உதவி இயக்குனர் பிரேம்சாந்தி, விருத்தாச்சலம் தோட்டக்கலை உதவி இயக்குனர் அருண், மங்களூர் வட்டார வளர்ச்சி அலுவலர் எஸ்.ஆர்.சங்கர், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முடிவில் தனி வட்டாட்சியர் ரவிச்சந்திரன் நன்றி கூறினார்.