ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் அரசால் தடை செய்யப்பட்ட பிட்காயின் எனப்படும் பணமில்லா பரிவர்த்தனை மூலம் ரூ.2 ஆயிரம் கோடி மோசடி
கோபியில் மட்டும் 100க்கும் மேற்பட்டவர்களிடம் மோசடி செய்துள்ள உடுமலையை சேர்ந்த ராஜதுரை, அவரது மனைவி ஸ்வேதா உட்பட 5 பேர் மீது கோபி காவல் நிலையத்தில் முதலீட்டாளர்கள் புகார். ஆன்லைன் மூலம் வீட்டு உபயோக பொருட்கள் விற்பனை செய்வதாக போலியான வெப்சைட் உருவாக்கி, முதலீட்டை பெற்றுக் கொண்டு இந்திய அரசால் தடை செய்யப்பட்ட பிட்காயின் எனப்படும் பணமில்லா பரிவர்த்தனையில் ஈடுபட்டதாக முதலீட்டாளர்கள் புகார் தெரிவித்துள்ளனர். முதலீட்டு பணத்தை திரும்ப கேட்ட போது கொலை மிரட்டல் விடுப்பதால், மோசடியில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி புகார் அளித்துள்ளனர்.