தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலையம் முன்பு சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு

தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலையம் முன்பு சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு

 


 

துண்டு பிரசுரம் மற்றும் பரிசு வழங்கி, விழிப்புணர்வு பேரணியை மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  அருண் பாலகோபாலன் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலையம் முன்பு சாலை பாதுகாப்பு, புதிய மோட்டார் வாகனச்சட்டம், சாலை விதிகளை மதித்து நடத்தல், தலைக்கவசம் அணிவது மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் சீட் பெல்ட் அணிவது குறித்தும் பொதுமக்களிடம் விழிப்புணர்வு நிகழ்ச்சியை தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இதில் காவல்துறையினர் சாலை விதிகள் கடைபிடிப்பது குறித்து உறுதிமொழி எடுத்தனர். பின் சாலையில் இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணிந்து வந்தவர்களுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் பரிசு வழங்கி ஊக்குவித்தார். பின் இரு சக்கர வாகனம் ஓட்டுபவர்கள் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்பதை வலியுறுத்தி காவல்துறையினர் இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணிந்து தென்பாகம் காவல் நிலையத்திலிருந்து புறப்பட்டு குரூஸ் பர்னாந்து சாலை வழியாக மீண்டும் தென்பாகம் காவல் நிலையம் முன்பு வந்து விழிப்புணர்வு பேரணியை நிறைவு செய்தனர். இப்பேரணியை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருண் பாலகோபாலன் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

 


 

அப்போது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் பேசுகையில் பெண்கள் மற்றும் பொதுமக்கள் தங்கள் செல்போனில் உள்ள பிளே ஸ்டோர் மூலம் "காவலன் எஸ்.ஒ.எஸ்" என்ற செயலியை பதிவிறக்கம் செய்து கொண்டு, அதில் தங்கள் உறவினர்கள் அலைபேசி எண்கள் மற்றும் அதில் கேட்கப்படும் உங்களை பற்றிய விபரங்களை பதிவு செய்து கொள்ளவேண்டும். அவ்வாறு செய்து கொண்டால் சமூக விரோதிகளால் உங்களுக்கு ஆபத்து ஏற்படும் போது மேற்படி காவலன் செயலில் உள்ள பட்டனை அழுத்தினால் நீங்கள் ஆபத்தில் உள்ளீர்கள் எனவும், உங்கள் போனில் உள்ள கேமரா தானாகவே இயங்கி நீங்கள் இருக்கும் இடத்தை நீங்கள் பதிவு செய்துள்ள உறவினர்கள் செல்போன் எண்கள் மற்றும் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் அனுப்பி காவல்துறையினர் நீங்கள் இருக்கும் இடத்திற்கு உடனடியாக வந்து உங்களை காப்பாற்ற நடவடிக்கை எடுப்பார்கள், தூத்துக்குடியை பொருத்தவரையில் பத்து நிமிடங்களில் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து நடவடிக்கை எடுப்பார்கள் எனவும், இருசக்கர வாகனம் ஓட்டுபவர்கள் தலைக்கவசம் அணிவதன் மூலம் 72 சதவீத காயங்களால் ஏற்படும் ஆபத்து மற்றும் தீவிர 39% மரணத்திற்கான வாய்ப்பு மற்றும் மருத்துவச் செலவை குறைக்கிறது. வாகனம் ஓட்டும் போது சராசரியாக உள்ள வேகத்தைவிட மணிக்கு 1 கிலோமீட்டர் வேகத்தை அதிகரிக்கும் போது 3 சதவீத ஆபத்தும், 4 முதல் 5 சதவீதம் மரணமும் ஏற்பட வாய்ப்புள்ளது. ஆகவே அதிக வேகத்தில் செல்வது ஆபத்தானது. நான்கு சக்கர வாகனத்தில் செல்பவர்கள் கட்டாயம் சீட் பெல்ட் அணிந்து செல்ல வேண்டும் இருசக்கர வாகனம் ஓட்டுபவர்கள் மற்றும் பின் இருக்கையில் அமர்ந்து செல்பவர்கள் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும்.

 

தூத்துக்குடி மாவட்டத்தில் 2017, 2018 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளில் சாலை விதிகளை மீறியவர்கள் மீது 8,27,366 வழக்குகளும், தலைக்கவசம் அணியாதவர்கள் மீது 4,27,973 வழக்குகளும், குடி போதையில் வாகனம் ஓட்டியவர்கள் மீது 29,910 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 3486 விபத்துகள் நடந்துள்ளன. இதில் 900 பேர் பலியாகியுள்ளனர். இருசக்கர வாகனங்களில் பயணித்தவர்கள் 278 பேர் மரணமடைந்தனர். 46 பேர் இரு சக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்து சேர்ந்து சென்றவர்கள் போட்டோ போட்டோ மற்றும் 163 பாதசாரிகள் மரணமடைந்துள்ளனர். 216 இரு சக்கர வாகனம், 122 கனரக வாகனம், 132 கார், 76 பேருந்து, 26 ஆட்டோ, 52 வேன், 77 அடையாளம் தெரியாத வாகனங்கள் ஆகியவை மரணம் ஏற்படுத்திய வாகனங்கள் ஆகும். பெரும்பாலான விபத்துக்களில் ஓட்டுநர்கள் வெளிக்காயங்களோ அல்லது இரத்தகசிவோ இல்லாமல் தலைகாயத்தால்தான் இறந்துள்ளனர் எனவும், பொதுமக்கள் காவல்துறையின் உதவிக்கு காவல் கட்டுப்பாட்டு அறை இலவச தொலைபேசி எண் 100ஐ தொடர்பு கொள்ளுமாறும் கேட்டுக்கொண்டார். இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் தூத்துக்குடி காவல் துணை கண்காணிப்பாளர் பிரகாஷ்  முன்னிலையில் நடைபெற்றது. இதில் தென்பாகம் காவல் ஆய்வாளர்  கிருஷ்ணகுமார், மத்திய பாகம் காவல் ஆய்வாளர் ஜெயப்பிரகாஷ், தெர்மல் நகர் காவல் ஆய்வாளர் கோகிலா,அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் வனிதா,உதவி ஆய்வாளர்கள் ராஜாமணி, செல்வராஜ், சங்கர், ஊர்காவல்பெருமாள், ரவிக்குமார், சுந்தரம் மற்றும் காவல்துறையினர் கலந்து கொண்டனர்.

Previous Post Next Post