மாநில அளவிலான குழு விளையாட்டு மற்றும் தடகளப் போட்டிக்கு திருப்பூர் தி ப்ரண்ட்லைன் அகாடமி மாணவ,மாணவிகள் தேர்வு.
திருப்பூர் பள்ளிக்கல்வித்துறை சார்பில் மாவட்ட அளவிலான குழு விளையாட்டு போட்டி மற்றும் தடகளப் போட்டி திருப்பூர் கே.எஸ்.சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. இதில் குறுமைய அளவில் குழு விளையாட்டு போட்டியில் முதலிடம் பெற்ற அணிகள் தடகளப் போட்டியில் முதலிடம் பெற்ற மாணவ,மாணவிகள் மாவட்ட விளையாட்டு போட்டியில் கலந்து கொண்டனர். இதில் திருப்பூர் தி ப்ரண்ட்லைன் அகாடமி பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு மாவட்ட அளவிலான குழு விளையாட்டு போட்டியிலும், தடகள போட்டியிலும் முதலிடம் பெற்று மாநில போட்டிக்கு தகுதி பெற்றனர்.
குழு விளையாட்டு போட்டி: 17 வயதிற்குட்பட்ட மாணவர்கள் பிரிவில் கால்பந்து போட்டியில் முதலிடம் மிக மூத்தோர் பிரிவில் வாலிபால் முதலிடம் இளையோர் பிரிவில் இறகுபந்து மாணவர் பிரிவில் கிருத்திக் மற்றும் ரிபினேஷ் முதலிடம். மூத்தோர் பிரிவில் இறகுபந்து ஒற்றயர் பிரிவில் ரோகித் முதலிடம், மூத்தோர் பிரிவில் இறகுபந்து இரட்டையர் பிரிவில் அஸ்வத் விக்னேஷ் மற்றும் தாபீஸ் முதலிடம், மிக மூத்தோர் பிரிவில் இறகுபந்து இரட்டையர் பிரிவில் நவீன் மற்றும் தானேஷ் முதலிடம், மூத்தோர் மாணவியர் பிரிவில் இறகுபந்து ஒற்றயர் பிரிவில் ஸ்ரீகாயத்திரி, இரட்டையர் பிரிவில் ஸ்ரீகாயத்திரி மற்றும் வசுந்தரா முதலிடம் ஆகிய மாணவ மாணவிகள் மாவட்ட போட்டியில் முதலிடம் பெற்று மாநில போட்டிக்கு தகுதி பெற்றனர்.
சதுரங்கம்: இளையோர் சதுரங்க போட்டியில் கிஷோர் முதலிடம, மூத்தோர் மாணவியர் பிரிவில் வைஷ்ணவி இரண்டாமிடம் பெற்றனர்.
தடகள போட்டி: மாவட்ட அளவிலான தடகளப் போட்டியில் மாணவர் மிக மூத்தோர் பிரிவில் தமிழரசன் உயரம் தாண்டுதலில் முதலிடம், மிக மூத்தோர் பிரிவில் ரோகித் குண்டு எறிதலில் இரண்டாமிடம் மாணவியர் பிரிவில் சந்தியா உயரம் தாண்டுதலில் முதலிடம், மும்முனை தாண்டுதலில் இரண்டாமிடம் நேகா 800மீ ஓட்டப்பந்தயம் முன்றாமிடம் ஆகிய மாணவ, மாணவிகள் மாவட்ட போட்யில் வெற்றி பெற்றனர். வெற்றி பெற்ற மாணவ மாணவியர்களை பள்ளியின் தாளாளர் கே.சிவசாமி, எஸ்.சிவகாமி இயக்குனர் சக்திநந்தன் - வைஷ்ணவி மற்றும் முதல்வர் வசந்தராஜ் ஆகியோர் பாராட்டினர்.