வேப்பூரில் முதலமைச்சர் சிறப்பு குறைதீர்ப்பு முகாம்




வேப்பூரில் முதலமைச்சர் சிறப்பு குறைதீர்ப்பு முகாம் நடைபெற்றது.

 


 

கடலூர் மாவட்டம், வேப்பூர் தாலுக்காவிற்குட்பட்ட பகுதிகளுக்கான முதலமைச்சர் சிறப்பு குறைதீர்ப்பு முகாம் மற்றும்  நலத்திட்டங்களை விருத்தாசலம் எம்எல்ஏ கலைச்செல்வன் வழங்கும் நிகழ்ச்சி  வேப்பூரில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு விருத்தாசலம் சார் ஆட்சியர் பிரவீன்குமார் தலைமை தாங்கினார் வேப்பூர் வட்டாட்சியர் கமலா வரவேற்புரை ஆற்றினார். வேப்பூர் தாலுக்காவிற்குட்பட்ட பயனாளிகளுக்கு விருத்தாசலம் சட்டமன்ற உறுப்பினர்  கலைச்செல்வன் நலத்திட்டங்கள் வழங்கி சிறப்புரை ஆற்றினார். 

 


 

விழாவில் சமூக பாதுகாப்பு திட்த்தின் சார்பில் 20 லட்சம் மதிப்பில்  174 பயணாளிகளுக்கு நலத்திட்டங்களும், 10 லட்சம் மதிப்பில் 46 பயணாளிகளுக்கு இலவச வீட்டுமனை பட்டா ஒப்படைப்பும், 49 ஆயிரம் மதிப்பில் 4 நபர்களுக்கு இலவச மனைபட்டாவும்,  42 நபர்களுக்கு உட் பிரிவு பட்டா மாற்றமும், 20 நபர்களுக்கு முழு பட்டா மாற்றமும்,  4 நபர்களுக்கு புதிய குடும்ப அட்டை என 290 நபர்களுக்கு 31 லட்சத்து  49 ஆயிரத்து 240 ரூபாய் மதிப்பில் நலத்திட்டங்கள் வழங்கபட்டது.

 


 

விழாவில் மாவட்ட சமூக பாதுகாப்பு திட்ட மாவட்ட அலுவலர் பரிமளம், சார் ஆட்சியரின் நேர்முக உதவியாளர் அரங்கநாதன், வேப்பூர் சமூக நல வட்டாட்சியர்  ரவிசந்திரன்,  நல்லூர் ஒன்றிய செயலாளர் பச்சமுத்து, மாவட்ட கூட்டுறவு வங்கி தலைவர் ரவிசந்திரன், நல்லூர் வட்டார வளர்ச்சி அலுவலர் காமராஜ், தலைமையிடத்து  மண்டல வட்டாட்சியர் சாந்தி , துணை வட்டாட்சியர் பாலமுருகன், தேர்தல் பிரிவு வட்டாட்சியர்  பூங்குழலி  வருவாய் ஆய்வாளர்கள் வேப்பூர் பழனி, சிறுபாக்கம் குமார்,  முதுநிலை வருவாய் ஆய்வாளர் ராஜவேல்  வட்ட வழங்கல் அலுவலர் சிவா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


 

 



 

Previous Post Next Post