எஸ் புதூர் கிராமத்தில் மக்காச்சோள பயிரில் படைப்புழு தாக்கத்தைக் கட்டுப்படுத்தும் வழிமுறைகள் குறித்த விழிப்புணர்வு

எஸ் புதூர் கிராமத்தில் மக்காச்சோள பயிரில் படைப்புழு தாக்கத்தைக் கட்டுப்படுத்தும் வழிமுறைகள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

 


 

கடலூர் மாவட்டம் மங்களூர் அடுத்த எஸ் புதூர் கிராமத்தில் மக்காசோள பயிரில் படைப்புழு தாகத்தை கட்டுப்படுத்தும் வழிமுறைகள் குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு வேளாண்மை அலுவலர் சதீஷ்குமார் தலைமை தாங்கினார். உதவி அலுவலர் கணேஷ் பாலன் முன்னிலை வகித்தார்.

 

சிறப்பு அழைப்பாளராக விருத்தாச்சலம் மண்டல ஆராய்ச்சி நிலையம் பூச்சியியல் துறை வல்லுநர் மருத்துவர் இந்திராகாந்தி கலந்துகொண்டு மக்காச்சோள பயிர்களைப் பார்வையிட்டார். பின்னர் ஆத்மா திட்டத்தின் கீழ் உள் மாவட்ட விவசாயிகளுக்கு மக்காச் சோளப் பயிரில் படைப்புழு தாக்கத்தைக் கட்டுப்படுத்தும்  வழிமுறைகள் குறித்து பயிற்சிகள் அளித்தார். அதைத்தொடர்ந்து  ஏரிக்கரையில் பனை விதைகள் நட்டனர். இந்நிகழ்ச்சியில் ஆத்மா திட்ட அலுவலர்கள் சௌந்தரராஜன் செல்லமுத்து முத்துசாமி மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர்.

Previous Post Next Post