பொயணப்பாடி அரசு உதவி பெறும் மாணிக்கம் நடுநிலைப்பள்ளியில் டெங்கு விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
கடலூர் மாவட்டம் வேப்பூர் தாலுக்கா பொயணப்பாடி கிராமத்தில் உள்ள அரசு உதவி பெறும் மாணிக்கம் நடுநிலைப்பள்ளியில் டெங்கு விழிப்புணர்வு மற்றும் நிலவேம்பு கசாயம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மங்களூர் வட்டார தலைமை மருத்துவ அலுவலர் கலைச்செல்வி தலைமை தாங்கினார். ஊராட்சி மன்ற செயலாளர் கருணாமூர்த்தி முன்னிலை வகித்தார். பள்ளி தலைமை ஆசிரியர் செந்தில்நாதன் வரவேற்றார்.
முகாமில் பொதுமக்களுக்கு காய்ச்சல்கள் கண்டறிந்து பின் சிகிச்சை அளிக்கப்பட்டது.
பின் மாணவர்களுக்கும், பொதுமக்களுக்கும் நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது. அதைத் தொடர்ந்து பள்ளி மாணவர்களுக்கு டெங்கு காய்ச்சல் மற்றும் கொசுக்கள் மூலம் பரவும் நோய்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மேலும் அக்கிராமத்தில் வீடு வீடாக சென்று கொசுப்புழு ஒழிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு
பின் அனைத்து வீடுகளிலும் புகை மருந்து அடிக்கப்பட்டது. இதில் மருத்துவ அலுவலர் சரவணன் சுகாதார ஆய்வாளர் தேவ கிருஷ்ணன் மாணவ மாணவியர்கள் ஆசிரியர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.