தமிழர் விடியல் கட்சியின் சார்பாக விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் பிறந்த நாள் விழா

பழனி அருகே மானூரில் தமிழர் விடியல் கட்சியின் சார்பாக விடுதலைப் புலிகளின் தலைவர் மேதகு பிரபாகரனின் பிறந்தநாள் விழா நிகழ்ச்சி நடைபெற்றது..



பழனி அடுத்த மானூர் ஆத்துப்பாலம்  இளமாறன் தோட்டத்தில் தமிழர் விடியல் கட்சியின் சார்பாக இலங்கை விடுதலை புலிகளின் தலைவர் மேதகு பிரபாகரனின் 65 ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் தலைமை ஒருங்கிணைப்பாளராக டைசன் மற்றும் இளமாறன் தலைமை ஏற்றனர். பிரபாகரனின் பிறந்தநாள் விழா நிகழ்ச்சியின் சிறப்பு அழைப்பாளராக பெரியார் திராவிடர் கழக பொதுச் செயலாளர் ராமகிருஷ்ணன், தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை தலைவர் தனியரசு,
தமிழ் புலிகள் கட்சி தலைவர் நாகை திருவள்ளுவன், தமிழக மக்கள் ஜனநாயக கட்சி தலைவர் சரிப், விடுதலை தமிழ் புலிகள் கட்சியின் தலைவர் குடந்தை அரசன், திராவிடர் தமிழர் கட்சியின்  தலைவர் வெண்மணி, மற்றும் வழக்கறிஞர் அங்கயற்கண்ணி, ஆகியோரும்



நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு குழுவாக ஜீவானந்தம்,பழனி மணி, கணேஷ் குமார், கருப்புசாமி, பிரவீன், ஆகியோரும் கலந்து கொண்டனர். கட்சித் தலைவர்கள் கூறுகையில் மேதகு பிரபாகரன் ஒரு இனத்தின் தலைவன் ஒரு இனத்துக்காக போராடிய தலைவர் அவருடைய பிறந்த நாளில் சாதி மதமற்ற சமத்துவமான சமுதாயத்தை படைக்க வேண்டும் என்று சூளுரைப்போம் மேலும் ராஜீவ் காந்தி கொலையில் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் 7 தமிழர்களையும் தமிழக ஆளுநர் உடனடியாக விடுதலை செய்ய முன்வர வேண்டும்.இலங்கையில் தமிழர்கள் ஒன்றினைந்து  விடுதலை புலிகள் என்ற ஒரு அமைப்பை ஏற்படுத்தி அமைதியான முறையில் ஆட்சி செய்து வந்த தமிழர்களை பல்வேறு குற்றங்களை சுமத்தி பழிவாங்கும் நோக்கில் ஒரு இனத்தையே அழிக்கும் நோக்கில் செயல் பட்ட ராஜபக்சே அரசை மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். ஒரு களப்போராளி தன் மக்களுக்காக தன் குடும்பத்தையே போரில் முன்னிறுத்தி பலி கொடுத்துள்ளார் என்று பல்வேறு செய்திகளை எடுத்துக் கூறினர். இந்நிகழ்வில் திராவிடர் கழகம், திராவிடர் விடுதலைக் கழகம், பெரியார் திராவிடர் கழகம், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி,தமிழ் புலிகள் கட்சி, திராவிடர் தமிழர் கட்சி, உள்ளிட்ட பல்வேறு கட்சியினுடைய தோழர்கள் 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.


 


 


Previous Post Next Post