பிரம்மதேசத்தில் காளான் வளர்ப்பு பயிற்சி முகாம்

பிரம்மதேசத்தில் காளான் வளர்ப்பு பயிற்சி முகாம் நடைபெற்றது.

 


 

அந்தியூர் அருகே உள்ள பிரம்மதேசம் பகுதியில், காளான் வளர்ப்பு குறித்து பயிற்சி முகாம், நடந்தது. முன்னதாக நடைபெற்ற இந்த முகாமில், ஆப்பக்கூடல் குமரகுரு வேளாண்மை கல்லூரி மாணவிகள், கலந்துகொண்டு இப்பகுதியில் உள்ள, விவசாயிகளுக்கு, காளான் வளர்ப்பு பயிற்சி குறித்து எடுத்துறைத்தனர். மேலும் இம்முகாமில் சிப்பிகாளான் என்பவை தாவர இனத்தின் பூசண வகைப்பாட்டை சேர்ந்ததாகும். இது தமிழக சூழ்நிலைகளுக்கு சிப்பி காளான் வளர்ப்பு மிகவும் ஏற்றது. இதற்கு 100 கிலோ நெல் வைக்கோலில் இருந்து, சராசரியாக 70 கிலோ காளான் வரையிலும், உற்பத்தி செய்யமுடியும். மேலும் இந்த சிப்பிகாளான்களுக்கு வித்து தயாரித்தல், உருளை படுக்கை அமைத்தல், பராமரிப்பது மற்றும் அறுவடை முறைகள் குறித்தும், கல்லூரி மாணவிகள் விவசாயிகளுக்கு எடுத்துரைத்தனர். இதில் அப்பகுதி மக்கள் பலர் கலந்து கொண்டனர்.

Previous Post Next Post