வேளாண்மைத்துறையின் மூலம் மக்காச்சோளப்பயிரில் படைப்புழு கட்டுப்படுத்தும் திட்டம்

தூக்கநாயக்கன்பாளையம் வட்டாரத்தில் வேளாண்மைத்துறையின் மூலம் 
மக்காச்சோளப்பயிரில் படைப்புழு கட்டுப்படுத்தும் திட்டம் 



தூக்கநாயக்கன்பாளையம் வட்டாரத்தில் வேளாண்மைத்துறையின் மூலம் மக்காச் சோளப் பயிரில் படைப்புழு தாக்குதலைக் கட்டுப்படுத்த மொத்த பரப்பில் பயிர்பாதுகாப்பு மருந்து தெளித்தல் திட்டம் துவங்கப்பட்டது. இத்திட்டத்தை ஈரோடு மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் பிரேமலதா துவங்கி வைத்தார். இதுகுறித்து தூக்கநாயக்கன்பாளையம் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் சுந்தரராஜன் அவர்கள் கூறுகையில்:- தமிழகத்தில் தற்போது நிலவும் சூழலில் மக்காச்சோளப்பயிரில் படைப்புழு தாக்குதல் காணப்படுவதால் வேளாண்மைத்துறையின் மூலம் மக்காச்சோளப் பயிரில் படைப்புழு தாக்குதலை கட்டுப்படுத்த மொத்த பரப்பில் மருந்து தெளித்தல் திட்டம் அறிமுகப் படுத்தப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் மூலம் தூக்கநாயக்கன்பாளையம் வட்டாரத்தில் 100 ஏக்கர் மருந்து தெளித்து படைப்பழுவினை முழுமையாக கட்டுப்படுத்த நிதி ஒதிகீடு பெறப்பட்டுள்ளது.  1 ஹெக்டருக்கு, மக்காசோளம் பயிர் விதைத்த நாள் முதல் 21 நாள் பயிருக்கு ரூபாய் 1500-ம், விதைத்த 21 நாள் முதல் 45 நாள் பயிருக்கு ரூபாய்.3000-ம் வீதம் மருந்தும் மற்றும் தெளிப்பு செலவீனமாக ஒரு ஹெக்டருக்கு, ரூபாய். 500- அந்தந்த பகுதியில் உள்ள உழவர் ஆர்வலர் குழுக்கள் மூலம்இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது, என தூக்கநாயக்கன்பாளையம் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் சுந்தரராஜன் அவர்கள் தெரிவித்துள்ளார்.


Previous Post Next Post