திருமயிலாடி வடிவேல்குமரன் கோயில் சூரசம்காரவிழா விமர்சியாக நடைபெற்றது.
நாகை மாவட்டம் கொள்ளிடம் அருகே திருமைலாடி வடக்கு நோக்கிய வடிவேல்குமரன் கோயிலில் சூரசம்காரவிழா இரவு நடைபெற்றது. நாகை மாவட்டம் கொள்ளிடம் அருகே திருமைலாடி சுந்தரேஸ்வரர் கோயில் உள்ளது. இக்கோயிலில் எங்கும் இல்லாத வகையில் வடக்கு நோக்கி நிஷ்டையில் அருள்பாலிக்கும் வடிவேல்குமரனுக்கு தனி சன்னிதி உள்ளது. இக்கோயிலில் சூரசம்கார விழாவையொட்டி பக்தர்கள் காப்புக்கட்டிக் கொள்ளுக் நிகழ்ச்சி கடந்த 27 ந் தேதி துவங்கியது. அதனைத் தொடர்ந்து 28 ந்தேதி சிறப்பு யாகமும், 2 ந்தேதி சனிக்கிழமை முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் தொடர்ந்து மாலை முருகப் பெருமானுக்கு சூரசம்கரத்துக்கு புறப்பாடு நிகழ்ச்சியும் அதனைத் தொடர்ந்து இரவு முருகப் பெருமான் அசுரனை வதம் செய்த நிகழ்ச்சியும் நடைபெற்றது. விழாவில் இந்து சமய அறநிலயத் துறை ஆய்வாளர் கண்ணதாசன், செயல் அலுவலர் அன்பரசன், கணக்கர் ராஜி , முன்னாள் ஒன்றியக்குழு உறுப்பினர் மணிமாறன் மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.