காளான் வளர்ப்பு பயிற்சி முகாம் நடைபெற்றது
கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்த ம.புடையூரில் அமைந்துள்ள ஜெஎஸ் ஏ வேளாண் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியில் விவசாயிகளுக்கு காளான் வளர்ப்பு பயிற்சி முகாம் நடைபெற்றது. முகாமில் உதவிப் பேராசிரியர் மோகனப்பிரியா வரவேற்புரையாற்றினார்.
கல்லூரி முதல்வர் முனைவர் தானு நாதன் தலைமை தாங்கினார். கல்லூரியின் நிர்வாக இயக்குனர்பொறியாளர் நடராஜன், மங்களூர் வட்டார வளர்ச்சி அலுவலர் புஷ்பராஜ், உழவர் உற்பத்தியாளர் சங்கத்தின் தலைவர் ரவிச்சந்திரன் சிறப்புரையாற்றினர். முகாமில் விவசாயிகளுக்கு சிப்பி காளான் வளர்ப்பு பால் காளான் வளர்ப்பு பற்றிய பயிற்சி அளிக்கப் பட்டது. இதில் ஏராளமான விவசாயிகள் கலந்துகொண்டு பயிற்சி பெற்றனர் முகாமில் கலந்துகொண்ட அனைத்து விவசாயிகளுக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது. முகாமில் நிறைவாக வேளாண்மை விரிவாக்க துறை உதவி பேராசிரியர் முனைவர் ராவ் கெலுஸ்கர் நன்றி கூறினார்.