நந்தா கல்வி நிறுவனங்களின் சார்பில் ஐந்தாவது இளம் விஞ்ஞானி 2019 படைப்பாற்றல் கண்காட்சி நடைபெற்றது.
திருப்பூர் காங்கேயம் சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நந்தா கல்வி நிறுவனங்களின் சார்பில் ஐந்தாவது இளம் விஞ்ஞானி 2019 மாணவர்களின் படைப் பாற்றல் கண்காட்சி நடைபெற்றது இந்த கண்காட்சியில் திருப்பூர் மாவட்டத்தின் அனைத்து பள்ளிகளிலும் இருந்து 300க்கும் மேற்பட்ட மாணவர்கள் தங்களது படைப்புகளை காட்சிப்படுத்தி இருந்தனர். இக்கண்காட்சியை திருப்பூர் மாவட்ட ஆட்சியர் விஜய கார்த்திகேயன் துவக்கி வைத்தார். இந்த கண்காட்சியில் மாணவர்கள் வீடுகளில் உற்பத்தியாகும் திடக் கழிவுகளை உரமாக மாற்றும் கருவி, ஆழ்குழாய் கிணறுகளில் கழிவு நீர் கலப்பதை அறிவிக்கும் கருவி, ஆற்று நீரின் மாசு தன்மையைக் கண்காணிக்கும் கருவி என 19 க்கும் மேற்பட்ட தனித்துவம் வாய்ந்த படைப்புகளுடன் 300 வகையிலான வெவ்வேறு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப படைப்புகள் காட்சிப் படுத்தப் பட்டிருந்தது.
இந்த கண்காட்சியில் அனைவரது பார்வையும் தண்ணீரில் இயங்கும் இரு சக்கர வாகனம் மற்றும் பெட்ரோல் மூலம் மின்சாரத்தை சேமித்து அதன் மூலம் இயங்கும் வாகனம் என்ற இரண்டு வாகனங்கள் மீது அமைந்திருந்தது. சேக் சல்மான் என்ற மாணவர் இருசக்கர வாகனத்தில் தண்ணீரை நிரப்பி அதில் சில மூலக்கூறுகளை சேர்த்து அலுமினியம் துண்டுகளை அதில் போடுவதன் மூலம் ஏற்படும் வினை காரணமாக ஹைட்ரஜன் உருவாகி அதன் மூலம் இரு சக்கர வாகனத்தை இயக்கும் முறையை காட்சி படுத்தி இருந்தார். இந்த கண்டுபிடிப்பு அனைவரது பார்வையும் ஈர்த்தது அதேபோல ஹிஜாஸ் அகமது என்ற மாணவர் பெட்ரோல் மூலமாக மின்சாரத்தை சேமித்து அதிக தூரம் பயணிக்கும் முறையையும் கண்டறிந்துள்ளார்.
இதன் மூலமாக ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு வண்டியை இயக்கும் பொழுது அந்த பெட்ரோல் தீர்ந்த பிறகு அதன் மூலமாக 8 மணி நேரம் ஓடக் கூடிய அளவில் பேட்டரி சார்ஜ் செய்யப்பட்டிருக்கும் எனவும் மணிக்கு 40 கிலோ மீட்டர் வேகத்தில் 8 மணிநேரம் இந்த வாகனத்தின் மூலம் பயணிக்கலாம் எனவும் தெரிவித்தனர் மின் முறையில் இயங்குவதற்கு தனி ஆக்சிலேட்டர் பெட்ரோல் மூலம் இயங்க தனி ஆக்சிலேட்டர் என பிரித்து மோட்டார்களையும் குறைந்த செலவில் அமைத்து ஹைபிரிட் பைக் என காட்சிப் படுத்தப்பட்ட இந்த கண்டுபிடிப்பு அனைவரது கவனத்தையும் ஈர்த்தது.
இந்நிகழ்ச்சிக்கு ஸ்ரீ நந்தா கல்வி அறக்கட்டளை தலைவர் சண்முகம் தலைமை தாங்கினார். இக்கண்காட்சியை திருப்பூர் மாவட்ட கலெக்டர் விஜய்கார்த்திகேயன் துவக்கி வைத்தார். நந்தா கல்வி நிறுவனங்களின் ஆலோசகர் டாக்டர் விஸ்வநாதன், முதன்மை நிர்வாக அலுவலர் ஆறுமுகம், ஸ்ரீ நந்தா கல்வி அறக்கட்டளையின் செயலாளர் நந்தகுமார் பிரதீப், நந்தா கல்வி நிறுவனங்களின் செயலாளர் திருமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கௌரவ விருந்தினராக ஜெயந்தி மெட்ரிக் பள்ளி தாளாளர் கிருஷ்ணன், சிறப்பு விருந்தினராக திருப்பூர் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி ரமேஷ் கலந்துகொண்டனர்.