திருநீலக்குடிசோழீஸ்வரர் கோயிலில் திருவாசகம் முற்றோதல் நிகழ்ச்சி நடைபெற்றது.
திருவிடைமருதூர் தாலுக்கா திருநீலக்குடி அருள்மிகு வேதாந்த நாயகி சமேத சோழீஸ்வரர் திருக்கோயிலில் திருவாவடுதுறை ஆதீனம் 24வது குருமகாசன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் ஆணைப்படி மயிலாடுதுறை ஆன்மீக பேரவை மயிலாடுதுறை சைவ சித்தாந்தசபை மற்றும் தமிழ்நாடு திருமூலர் திரு மன்றத்தின் சார்பில் திருவாசகம் முற்றோதல் நடைபெற்றது. எட்டாம் திருமுறை யான திருவாசகத்தில் உள்ள அத்தனை பாடல்களும் முற்றோதல் செய்யப்பட்டது. குறிப்பாக சிவபுராணம், கீர்த்தி திருஅகவல், திருஅண்டப்பகுதி, போற்றித் திருஅகவல் திருச்சதகம், நீத்தல் விண்ணப்பம், திருவம்பாவை ,திரு அம்மானை, திருப்பொற்சுண்ணம், திருக்கோத்தும்பி, திருத்தெள்ளேணம், திருச்சாழல், திருப்பூவல்லி, அன்ன பத்து ,குயில் பத்து, திருத்தசாங்கம், திருப்பள்ளி எழுச்சி, செத்திலாப் பத்து, அடைக்கலப்பத்து, ஆசைப்பத்து, அதிசயப் பத்து, புணர்ச்சிப் பத்து, வாழாப்பத்து ,அருள் பத்து ,கண்டபத்து, பிரார்த்தனைப் பத்து, குழைத்த பத்து, அச்சப்பத்து, பிடித்த பத்து, திருப்படை எழுச்சி ,திருவெண்பா அச்சோ பதிகம் ஆகிய 51 பதிகங்கள் நெய்வேலி சிவனடியார்கள் திருக்கூட்டம் தலைவர் சிவகண முருகப்பன் தலைமையில் முற்றோதல் செய்யப்பட்டது. அதற்கான ஏற்பாடுகளை மயிலாடுதுறை ஆன்மீக பேரவை ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் டாக்டர் ராம சேயோன் மற்றும் திருநீலக்குடி ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் முல்லைவேந்தன் ஆகியோர் செய்திருந்தார்கள்.