பவானி செல்லியாண்டி அம்மன் கோவில் கும்பாபிஷேக விழா ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
பவானி செல்லியாண்டி அம்மன் கோவில் 4-வது கும்பாபிஷேகம் குறித்த ஆலோசனைக் கூட்டம் பவானி செல்லியாண்டி அம்மன் கோவில் வளாகத்தில் நடைபெற்றது நிகழ்ச்சிக்கு தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பண்ணன் தலைமை வகித்தார் கோவில் செயல் அலுவலர் அருள்குமார் இந்து அறநிலைத்துறை ஆய்வாளர் ரவிக்குமார் தொழிலதிபர் கே எம் எஸ் பழனிச்சாமி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் கிருஷ்ணராஜ் பவானி திமுக நகர செயலாளர் ப. சீ. நாகராசன் வெங்கடேஸ்வர பொறியியல் கல்லூரியின் தாளாளர் வெங்கடேஸ்வரன் பிரசாத் மகேந்திரன் மற்றும் ஊர் கொத்துக்காரர் காந்தி என்கிற வெங்கட்ராமன் மற்றும் கான்சியஸ் சுப்பிரமணி தொட்டிபாளையம் கொத்துக்காரர் கைலாசம் ஆகியோர் நிகழ்ச்சிக்கு முன்னிலை வகித்தனர்
இதில் சுமார் 25 லட்சத்தில் இருந்து 30 லட்சம் வரையில் கும்பாபிஷேக செலவுகள் குறித்தும் மேலும் நிகழ்ச்சியில் 33 சமுதாயத்தை சார்ந்த கட்டளைதாரர்கள் மற்றும் 7 மிராசுதாரர்கள் கலந்து கொண்டு இவர்களுக்கான பணிகள் மற்றும் விழா பொறுப்புக் குழு அமைத்தல் குறித்தும் மேலும் கும்பாபிஷேக விழா குழுவினர் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. இது குறித்து வருகிற வெள்ளிக்கிழமை அருள்வாக்கு கேட்ட பின்னர் பணிகள் துவக்க துரித நடவடிக்கை எடுக்கப்படும் என கூட்டத்தில் அமைச்சர் கூறியபோது ஏகமனதாக ஏற்றுக் கொண்டு முடிவு செய்யப்பட்டது நிகழ்ச்சியில் அனைத்து சாதிகளைச் சேர்ந்த பிரமுகர்கள் மற்றும் ஊர்க்காரர்கள் மற்றும் ஊர் பிரமுகர்கள் உள்பட பலர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்