வேப்பூர் அரசு மருத்துவமனையில் 24 மணிநேர அவசர சிகிச்சை மையத்தை சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர் திறந்து வைத்தார்.
கடலூர் மாவட்டம் வேப்பூர் அரசு மருத்துவமனையில் 24 மணி நேர அவசர சிகிச்சை மையத்தை தமிழக சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர் திறந்து வைத்தார். நிகழ்ச்சிக்கு, கடலூர் மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன் தலைமை தாங்கினார். மாவட்ட சுகாதார துறை இணை இயக்குனர் ரமேஷ்பாபு, துணை இயக்குனர் கீதா, விருத்தாசலம் எம்.எல்.ஏ., கலைச்செல்வன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாவட்ட மக்கள் தொடர்பு அலுவலர் மகேஷ்வரன் வரவேற்றார். சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று 24 மணி நேர அவசர சிகிச்சை மையத்தை திறந்து வைத்தார்.
வேப்பூர் அரசு மருத்துவமனையில் கல்வெட்டு மற்றும் 24 மணிநேர அவசர மையத்தை திறந்து வைத்து, மருத்துவ உபகரணங்கள், சிகிச்சை பொருட்களை அமைச்சர் விஜய பாஸ்கர் ஆய்வு செய்தார். பின்னர், டெங்கு தடுப்பு குறித்து விழிப்புணர்வு பொருட்களை பார்வையிட்டார். பின்னர் நடைபெற்ற கூட்டத்தில் அமைச்சர் விஜயபாஸ்கர் பேசும்போது தமிழ்நாட்டில் தாம்பரம், பாடியநல்லுார், மகாபலிபுரம், ஈஞ்சம்பாக்கம் உள்ளிட்ட இடங்களில் உள்ளது போல 24 மணிநேர அவசர சிகிச்சை மையம் வேப்பூரில் அமைக்கப்பட்டது.
அதபோல், சென்னை முதல் கன்னியாகுமரி வரை செல்லும் சாலையில் விபத்தில் காயமடைபவர்கள் பயன்பெறும் வகையில் வேப்பூரில் 24 மணிநேர அவசர சிகிச்சை மையம் திறக்கப்பட்டுள்ளது. வேப்பூர் அரசு மருத்துவமனைக்கு அறுவை சிகிச்சை பிரிவுக்கான உபகரணங்கள் விரைவில் வழங்கப்படும் என உறுதி அளித்தார்.
மேலும் வேப்பூர் பகுதியில் மருத்துவ கல்லூரி தொடங்க ஆய்வு செய்யபடும் என கூறினார் விழாவில் விருத்தாசலம் சார் ஆட்சியர் பிரவீன்குமார், வேப்பூர் வட்டாட்சியர் கமலா, நல்லூர் ஒன்றிய செயலாளர் பச்சமுத்து, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் காமராஜ், ஜெயக்குமார் மற்றும் அரசு அலுவலர்கள், அதிமுக நிர்வாகிகள் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.