பொங்கலூர் ஒன்றியத்தில் ரூ.2.18 கோடி மதிப்பிலான வளர்ச்சிப்பணிகள் பல்லடம் எம்.எல்.ஏ., கரைப்புதூர் நடராஜன் துவக்கி வைத்தார்
திருப்பூர் மாவட்டம், பொங்கலூர் ஒன்றியத்தில் ரூ.2.18 கோடி மதிப்பிலான வளர்ச்சிப்பணிகளை பல்லடம் எம்.எல்.ஏ., கரைப்புதூர் நடராஜன் துவக்கி வைத்தார். காட்டூர் ஊராட்சி, சோழியப்பக்கவுண்டன் புதூரில் ரூ.18.66 லட்சம் மதிப்பிலான சாலை அமைக்கும் பணிகளை பல்லடம் எம்.எல்.ஏ., கரைப்புதூர் நடராஜன் பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார். தொடர்ந்து அழகுமலை ஊராட்சி, கோவில்பாளையம் கருப்பராயன் கோவில் பகுதியில் ரூ.39.96 லட்சம் மதிப்பிலான தார் சாலை அமைக்கும் பணிகள், இதே ஊராட்சியில் ரூ.18.78 லட்சத்தில் கோவில்பாளையம் புதூரில் தார்ச்சாலை அமைக்கும் பணிகளையும் அவர் பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார். மேலும், தெற்கு அவிநாசிபாளையம் ஊராட்சியில் உள்ள கொடுவாய் அய்யம்பாளையம் பகுதியில். ரூ.24.28 லட்சம் மதிப்பில் தார்ச்சாலை அமைக்கும் பணிகள், கண்டியன் கோவில் ஊராட்சியில் முதியநெரிச்சல் பகுதியில் ரூ.54.85 லட்சம் மதிப்பிலான தார் சாலை பணிகள், இதே ஊராட்சியில் சேமலைக்கவுண்டன்பாளையத்தில் ரூ.40.98 லட்சம் பதிப்பில் தார் சாலை அமைக்கும் பணிகள், பெருந்தொலுவு ஊராட்சியில் ரூ.20 லட்சம் மதிப்பில் நொச்சிபாளையம் பகுதியில் சாலை அமைக்கும் பணிகள் என ரூ.2.18 லட்சம் மதிப்பிலான வளர்ச்சித்திட்ட பணிகளை பல்லடம் எம்.எல்.ஏ., கரைப்புதூர் நடராஜன் துவக்கி வைத்தார். வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மகுடேஸ்வரன், மகேஸ்வரன், உள்பட பலர் கலந்து கொண்டனர்.