ஆதிதிராவிடர் மக்கள் வசிக்கும் பகுதிகளில் ரூ.183.70 இலட்சம் மதிப்பீட்டில் பணிகளை பல்லடம் எம்.எல்.ஏ கரைப்புத்தூர் ஏ.நடராஜன் துவக்கி வைத்தார்




ஆதிதிராவிடர் மக்கள் வசிக்கும் பகுதிகளில் ரூ.183.70 இலட்சம் மதிப்பீட்டில் பணிகளை பல்லடம் எம்.எல்.ஏ கரைப்புத்தூர் ஏ.நடராஜன் துவக்கி வைத்தார். 

 


 

திருப்பூர் மாவட்டம் பல்லடம் சட்டமன்ற தொகுதி திருப்பூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட முதலிபாளையம் ஊராட்சி பகுதிகளில் ஆதிதிராவிடர் நலத்துறையின் மூலம் ரூ.183.70 இலட்சம் மதிப்பீட்டில் ஆதிதிராவிடர் மக்கள் வசிக்கும் பகுதிகளில் மழைநீர் வடிகால் கட்டுதல், புதிய தார் சாலைகள்  மேம்பாடு செய்தல், கான்கிரீட் சாலைகள் அமைத்தல், புதிய தெரு விளக்குகள் அமைத்தல், குடிநீர் குழாய்கள் விரிவாக்கம் செய்தல், மயான சுற்றுச் சுவர் அமைத்து மேம்பாடு செய்தல், மற்றும் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் ஆகிய பணிகளுக்கு பூமி பூஜை நடைபெற்றது.

 


 

இந்நிகழ்ச்சியை பல்லடம் சட்டமன்ற உறுப்பினர் கரைப்புதூர் A.நடராஜன் தலைமை தங்கி பணிகளை துவக்கி வைத்தார். உடன் வட்டார வளர்ச்சி அலுவலர்கள், மீனாட்சி, கனகராஜ், பொறியாளர், இளங்கோ, இந்துமதி, கௌசல்யா, மாணிக்காபுரம் கூட்டுறவு சொசைட்டி தலைவர் கிருஷ்ணமூர்த்தி, முன்னாள் ஊராட்சி மன்றத் துணைத் தலைவர் நடராஜன், வேலுச்சாமி, குமார், கணேஷ், ரமேஷ், மணி, ரவி, மற்றும் கழக நிர்வாகிகள் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்



 

 

 


 

Previous Post Next Post