திருப்பூரில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்ற பள்ளிகள் மற்றும் 100 சதவீத தேர்ச்சி வழங்கிய ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.
திருப்பூர் ஜெய்வாபாய் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில், பள்ளிக் கல்வித் துறையின் சார்பில் 2018-2019 ஆம் கல்வியாண்டில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்ற பள்ளிகள் மற்றும் 100 சதவீத தேர்ச்சி வழங்கிய ஆசிரியர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்களை மாவட்ட
ஆட்சித்தலைவர் க.விஜயகார்த்திகேயன் முன்னிலையில், பள்ளிக்கல்வி, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் அவர்கள் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் தலைவர், தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி.நிறுவனம் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் ஆகியோர் வழங்கினார்கள்.
இவ்விழாவில், பள்ளிக்கல்வி, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை
அமைச்சர் பேசுகையில்,
மறைந்தாலும் மக்கள் மனதில் வாழ்ந்து வருகின்ற மாண்புமிகு இதய தெய்வம்
புரட்சித்தலைவி அம்மா அவர்கள் தமிழகத்தில் ஏழை, எளியோர் இல்லாத நிலை வேண்டும் என்பதற்காக இந்தியாவிலுள்ள பிற மாநிலங்கள் வியக்கம் வகையில் அனைத்து துறைகளிலும் எண்ணற்ற பல திட்டங்கள் செயல்படுத்தி வந்தார்கள். குறிப்பாக கல்வித்துறையில் மாணவ, மாணவிகளின் நலனுக்காக விலையில்லா பாடப் புத்தகங்கள், விலையில்லா நோட்டு புத்தகங்கள், விலையில்லா பேருந்து பயண அட்டைகள், விலையில்லா மிதிவண்டிகள் மற்றும் விலையில்லா மடிக்கணினி உள்ளிட்ட 14 வகையான கல்வி உபகரணங்களும் வழங்கப்பட்டு வருகின்றன. மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்களின் நல்லாசியுடன் செயல்படும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் கல்வித்துறைக்கென பல்வேறு புதிய திட்டங்களை அறிவித்து அதற்கான அதிகப்படியான நிதியினையும் ஒதுக்கி தந்துள்ளார்கள். மேலும், இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களும் வியக்கும் வகையில் தமிழகத்தில் புதிய கல்வி புரட்சியினை உருவாக்கி வருகின்றோம். ஆசிரியர்களின் அனைத்து கோரிக்கைகளும் நிறைவேற்றுகின்ற அரசாக மாண்புமிகு அம்மா அவர்களின் அரசு செயல்பட்டு வருகிறது. என்பதை தெரிவித்துக்கொள்கிறேன். மேலும், கடந்த 2018-
19 ஆம் கல்வியாண்டில் மாநில அளவில் திருப்பூர் மாவட்டம் 10 வகுப்பு பொதுத்தேர்வில் 98.53மூ சதவீதம் தேர்ச்சி பெற்று முதலிடமும் மற்றும் 12 ஆம் பொதுத்தேர்வில் 95.37மூ சதவீதம் தேர்ச்சி பெற்று முதலிடமும் பெற்று சாதனை படைத்துள்ளது. இதற்காக கல்வித்துறை அமைச்சர் என்கின்ற முறையிலும் மற்றும் தமிழக அரசின் சார்பில் இந்த வெற்றிக்காக அயராது பாடுபட்ட ஆசிரியர்கள் மற்றும் மாணவச் செல்வங்களுக்கு எனது பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்வதோடு ஒரு சிறந்த கல்வியாளரை உருவாக்கும் உயரிய பொறுப்பு ஆசிரியர்களையே சாரும். உங்களுக்கான சிறு.சிறு இடர்பாடுகளையும் மாண்புமிகு அம்மா அவர்களின் அரசு முழுமையாக
பரிசீலித்து அதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என்பதனையும் தெரிவித்துக் கொள்வதோடு நடப்பு கல்வியாண்டிலும் நடைபெறும் பொதுத் தேர்வுகளிலும் முதலிடம் பெற வேண்டுமென தெரிவித்தார்.
இவ்விழாவில், கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் பேசுகையில்,
மறைந்தும் மறையாமலும் மக்களின் மனதில் வாழ்ந்து வருகின்ற மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்கள தமிழக மக்களின் வாழ்வு மேம்படைவதற்காக அனைத்து துறைகளிலும் எண்ணற்ற பல புரட்சிகரமான திட்டங்களை அறிவித்து சிறப்புடன் செயல்படுத்தி வந்தார்கள். அந்த வகையில் கல்வித்துறையில் மறுமலர்ச்சி ஏற்படுத்தும் வகையில் கல்வி பயிலுகின்ற மாணவ, மாணவியர்களுக்கு எண்ணற்ற பல திட்டங்களை தாயுள்ளத்தோடு வழங்கி வந்தார்கள். குறிப்பாக பாடப்புத்தகம் முதல் இலவச சீருடை, புத்தகப்பை மற்றும் காலனிகள் உட்பட 14 வகையான கல்வி உபகரணங்களும், விலையில்லா மிதிவண்டிகளும் மற்றும் மடிக்கணினிகளும் நமது மாணவ செல்வங்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. மாண்புமிகு அம்மா அவர்களின் வழியில் நல்லாட்சி புரிந்து வரும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் எண்ணற்ற பல திட்டங்கள் செயல்படுத்தி வருகிறார்கள். அரசு அளிக்கின்ற அனைத்து நலத்திட்டங்களையும் பொது மக்கள் மற்றும் மாணவச் செல்வங்கள் ஆகியோர் நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டுமெனவும் இன்று சான்றிதழ் பெறுகின்ற அனைத்து ஆசிரியர்களுக்கு எனது வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்வதோடு நடப்பு கல்வி ஆண்டிற்கான தேர்விலும் 10,11 மற்றும் 12 ஆகிய
பொதுத் தேர்வுகளிலும் நமது மாவட்டம் தொடர்ந்து முதலிடம் பெற்று நமது மாவட்டத்திற்கு பெருமை சேர்த்திட வேண்டுமென தெரிவித்தார்.
இந்நிகழ்வின் போது, திருப்பூர் தெற்கு சட்டமன்ற உறுப்பினர் சு.குணசேகரன் பல்லடம் சட்டமன்ற உறுப்பினர் கரைப்புதூர் ஏ.நடராஜன் ,திருப்பூர் வடக்கு சட்டமன்ற உறுப்பினர் கே.என்.விஜயகுமார் காங்கேயம் சட்டமன்ற உறுப்பினர் உ.தனியரசு, திருப்பூர் வருவாய் கோட்டாட்சியர் (பொ) சேகர், மாவட்ட முதன்மைக்கல்வி
அலுவலர் ரமேஷ், திருச்சி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சாந்தி, மாவட்ட கல்வி
அலுவலர்கள் க.பழனிச்சாமி, ஆனந்தி, சிவக்குமார், கு.பழனிச்சாமி, முன்னாள்
உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள், கூட்டுறவு சங்க தலைவர்கள், பள்ளி ஆசிரியர்கள், பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.