திருப்பூர் ஊராட்சி ஒன்றியம் முதலிபாளையம் ஊராட்சியில் டெங்கு காய்ச்சல் பரவியதை அடுத்து வாரம் தோறும் கொசு ஒழிப்பு, நோய் தடுப்பு பணிகளை மேற்கொள்ள திருப்பூர் கலெக்டர் விஜய கார்த்திகேயன் உத்தரவிட்டார். இதையடுத்து, திருப்பூர் வட்டார வளர்ச்சி அலுவலர் கனகராஜ் தலைமையில், முதலிபாளையம் ஊராட்சியில் தீவிர டெங்கு தடுப்பு, மற்றும் கொசு ஒழிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டது. இதில் ஊராட்சி செயலாளர்கள், கொசு ஒழிப்பு பணியாளர்கள், மகளிர் சுய உதவி குழுவினர் என 182 பேர் பணிகளில் ஈடுபட்டனர். இதில் பணியாளர்கள் நீர்த்தேக்க தொட்டிகளை, தூய்மை செய்தல், குப்பைகள் அகற்றுதல், கொசு மருந்து தெளிப்பு பணிகளில் ஈடுபட்டனர். இதில் மீனாட்சி நகர் பகுதியில் உள்ள டையிங் நிறுவனம் ஆண்டுக்கணக்கில் செயல்படாமல் இருந்த நிலையில், அங்குள்ள டையிங் திறந்தவெளி தொட்டிகளில் ஏராளமான கொசுப்புழுக்கள் இருப்பது கண்டறியப்பட்டது. எனவே கொசு மூலம் நோய் பரவ காரணமாக இருந்த டையிங் உரிமையாளருக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.
திறந்தவெளி தொட்டிகள் வைத்திருந்த டையிங் நிறுவன உரிமையாளருக்கு ரூ.1 லட்சம் அபராதம்