தூத்துக்குடி - பெங்களூர் இண்டிகோ விமான சேவை : 27ம் தேதி தொடங்கப்பட உள்ளது.
தூத்துக்குடி - பெங்களூர் இடையே இன்டிகோ விமான நிறுவனம் தனது சேவையை வருகிற 27ம் தேதி தொடங்குகிறது. கடந்த வருடம் ஜூலை மாதம் ஸ்பைஸ் ஜெட் நிறுவனத்தால், தூத்துக்குடி - பெங்களூர் இடையே ஆரம்பிக்கப்பட்ட விமான சேவை 6 மாதங்களுக்கு முன்பு திடீரென நிறுத்தப்பட்டது, தற்போது இன்டிகோ நிறுவனம் அந்த வழித்தடத்தில் புதிய சேவையை தொடங்கியுள்ளது,
இது குறித்து இன்டிகோ நிறுவன தரப்பில் கூறுகையில் :- "பெங்களூரில் இருந்து 5.25 மணிக்கு புறப்படும் விமானம் 7.10 மணிக்கு தூத்துக்குடி வந்தடையும். பின்னர் காலை 7.50 மணிக்கு தூத்துக்குடியில் இருந்து புறப்படும் விமானம் 9.30 மணிக்கு சென்றடையும். ATR 72 ரக விமானமான இதில் பயண கட்டணமாக ரூபாய்.3686 (All Inclusive) நிர்ணயிக்கப்பட்டுள்ளது, பயணிகள் Hand Luggage 7kg மற்றும் check in baggage 15kg வரையும் அனுமதிக்கப்படும் " என தெரிவித்துள்ளது,
மேலும் மேற்படி கட்டணம், மற்றும் பயணச் சுமை (luggage) அளவுகள் விதிகளைப் பொறுத்து மாறுதலுக்கு உட்பட்டது எனவும், தெரிவித்துள்ளது, இன்டிகோ நிறுவனம் ஏற்கனவே தூத்துக்குடி - சென்னை வழித்தடத்தில் 3 விமானங்களை இயக்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது தொழில் நகரமான தூத்துக்குடிக்கு பல்வேறு நாடுகளை சேர்ந்தவர்கள் வந்து செல்கின்றனர். இதன் காரணமாக தூத்துக்குடி விமான நிலையம் சுறுசுறுப்பாக இயங்கி வருகிறது. தூத்துக்குடி விமான நிலையத்துக்கு ஏர்பஸ் உள்ளிட்ட பெரிய விமானங்கள் வந்து செல்லும் வகையில் விரிவாக்கம் செய்வதற்கான நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருகிறது. இதற்கான நிலம் மாவட்ட நிர்வாகம் மூலம் கையகப்படுத்தப்பட்டு, விமான நிலைய ஆணையத்திடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது. ஆகவே விரிவாக்க பணிகளை விரைந்து முடித்து இந்தியாவின் முக்கிய வர்த்தக நகரங்களை இனைக்கும் வகையில் விமான சேவையை துவக்க வேண்டும் என்பது பொது மக்களின் நீண்ட நாள் கோரிக்கை.