கடலூரில் நியாய விலைக்கடை பணியாளர்கள் வேலை நிறுத்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழ்நாடு அரசு நியாய விலைக்கடை பணியாளர்கள் சங்கத்தின் சார்பில் வேலைநிறுத்த ஆர்ப்பாட்டம் கடலூர் பழைய ஆட்சியர் அலுவலகம் எதிரே நடந்தது. இதில் மாவட்ட தலைவர் சேகர் தலைமை தாங்கினார் .மாவட்ட செயலாளர் தங்கராஜ் வரவேற்றார். நரசிம்மன் ,நகராஜன், பாஸ்கர், ஆகியோர் முன்னிலை வகித்தனர் .தமிழ்நாடு அரசு நியாயவிலைக் கடைபணியாளர் சங்கத்தின் சிறப்பு தலைவர் கு.பாலசுப்பிரமணியன் சிறப்புரையாற்றினார். மாநில பொதுச் செயலாளர் ஜெயச்சந்திரராஜா கருத்துரை வழங்கினார். தமிழ்நாடு அரசு டாஸ்மாக் பணியாளர் சங்கம் மாநில செயல் தலைவர் சரவணன், தமிழ்நாடு அரசு பணியாளர் சங்கம் மாவட்ட செயலாளர் விவேகானந்தன், ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர் .மேலும் இந்த வேலை நிறுத்த ஆர்ப்பாட்டத்தில் மாநில பொதுக்குழு உறுப்பினர் தேவராஜ், கந்தன், பண்ருட்டி வட்டம் வேலாயுதம், முரளி ,உள்ளிட்டோர் கலந்து கொண்டனர் .மாவட்ட பொருளாளர் சங்கர் நன்றி கூறினார், ஆர்ப்பாட்டத்தில் நியாயவிலைக் கடைகளை தனித்துறையாக செயல்படுத்த வேண்டும் ,தமிழ்நாடு அரசு நியாய விலைக்கடை பணியாளர்களை பணி வரன்முறை செய்ய வேண்டும்,.உரிய ஊதியங்கள் வழங்க வேண்டும் உள்ளிட்ட 30க்கு மேற்பட்ட அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்பாட்டம் நடத்தினார்கள்