சீர்காழியில் மயிலாடுதுறை மாவட்டம் அறிவிக்க வேண்டி அனைத்து தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம்

சீர்காழியில் மயிலாடுதுறை மாவட்டம் அறிவிக்க வேண்டி அனைத்து தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.




மயிலாடுதுறை மாவட்டம் அறிவிக்க வேண்டி அனைத்து தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் சீர்காழி பழைய பேருந்து நிலையம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்பாட்டத்திற்கு ஓய்வு பெற்ற அலுவலர்கள் சங்க தலைவர் ஆர்.கல்யாணசுந்தரம் தலைமை வகித்தார். அக்செப்ட் அமைப்பு மாநில தலைவர் ஜெக.சண்முகம், தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்ற பொறுப்பாளர் ராஜேந்திரன், தரங்கம்பாடி ஓய்வூதியர் சங்க தலைவர் ராஜமாணிக்கம், மாவட்ட தலைவர் ராமானுஜம், ஆசிரியர் கோ.வைத்தியநாதன், சட்டநாதன், ராமகிருஷ்ணன், தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம் வெங்கடேசன், சீர்காழி பொறியாளர் சங்க தலைவர் வேல்முருகன், மூத்த பத்திரிகையாளர் டி.சௌந்தரபாண்டியன், ஓய்வு பெற்ற உடற்கல்வி ஆசிரியர் எஸ்.கிருஷ்ணமூர்த்தி, அஞ்சல தொழிற்சங்கம் தாஸ் மற்றும் பலர் திரளாக கலந்து கொண்டார்கள். ஆசிரியர் காசி.இளங்கோவன் நன்றி உரையாற்றினார். சீர்காழிக்கு வருவாய் கோட்டம் கொண்டு வரப்பட வேண்டும். கொள்ளிடத்தை தனி தாலுக்காவாக அமைக்க வேண்டும். சீர்காழி மற்றும் மயிலாடுதுறை வருவாய் கோட்ட பகுதியை சேர்ந்த மக்கள் மாவட்ட தலைநகரான நாகப்பட்டினம் செல்ல யூனியன் பிரதேசமான காரைக்கால் மாவட்டத்தை கடந்து செல்ல வேண்டும். அதற்கு புதுச்சேரி அரசுக்கு வாகன நுழைவு வரி செலுத்தப்பட வேண்டும் அல்லது அடுத்த மாவட்டமான திருவாரூர் மாவட்டத்தின் வழியாக கடந்து செல்ல வேண்டிய அவலநிலை. அரசு நிர்வாக நடைமுறைகளை எளிமையாக்கி பொதுமக்களுக்கு அரசு செய்ய வேண்டிய உதவிகளை உடனுக்குடன் செய்திடவும் பொதுமக்கள் மாவட்ட தலைமையிடம் செல்ல இடையூறு இல்லாமலும் கால விரயம் ஆகாமலும் இருக்க மயிலாடுதுறையை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம் அமைத்திட தமிழக முதல்வர் ஆவண செய்யுமாறு ஆர்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. 


Previous Post Next Post