திருப்பூரில் பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் மாவட்ட அளவிலான அறிவியல் கண்காட்சியினை கலெக்டர் க.விஜயகார்த்திகேயன் துவக்கி வைத்து பார்வையிட்டார்.
திருப்பூர் காங்கயம் சாலை, செயின்ட் ஜோசப் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் பள்ளிக் கல்லித்துறையின் சார்பில் மாவட்ட அளவிலான அறிவியல் கண்காட்சியினை மாவட்ட கலெக்டர் க.விஜயகார்த்திகேயன் துவக்கி வைத்து பார்வையிட்டார். திருப்பூர் மாவட்டம், பள்ளிக்கல்வித்துறை மற்றும் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மூலம் 47 -வது ஜவஹர்லால் நேரு மாவட்ட அளவிலான அறிவியல் கண்காட்சி, அறிவியல் பெருவிழா, அறிவியல் நாடக விழா மற்றும் கணித கருத்தரங்கு நடைபெற்றது.
இதனை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் துவக்கி வைத்து பார்வையிட்டார். மேலும், இக்கண்காட்சியில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் கல்வி மாவட்ட அளவில் தேர்ந்தெடுக்கப்பட்ட 58 படைப்புகளும் மற்றும் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி சார்பில் 100 படைப்புகளும் என 158 படைப்புகள் காட்சிபடுத்தப்பட்டன. மேலும், இப்படைப்புகளிலிருந்து பள்ளிக் கல்வித் துறை சார்பில் 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்ப வரையிலான மாணவர்களுக் கிடையே 1 மாணவர் 1 படைப்பு பிரிவில் 2 படைப்புகளும், 8 ஆம் வகுப்பு முதல் 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கிடையே இரு மாணவர் 1 படைப்பு பிரிவில் 1 படைப்பும், ஆசிரியர்களால் காட்சி படுத்தப்படும் படைப்பில் 1 படைப்பும் தேர்வு செய்யப்பட்டு மாநில அளவில் நடைபெறும் கண்காட்சிக்கு பரிந்துரைக்கப்படவுள்ளது. மேலும், மாவட்ட அளவிலான சிறந்த படைப்புகளுக்கும் பரிசுகளும் வழங்கப்படவுள்ளது. இந்நிகழ்வின் போது, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஆர்.ரமேஷ், மாவட்ட கல்வி அலுவலர்கள் பழனிச்சாமி (பொ), சிவக்குமார், திருப்பூர் தெற்கு வட்டாட்சியர் மகேஷ்வரன், பள்ளி தலைமையாசிரியர்கள் காயத்ரி, ராஜா, மாவட்ட உதவி திட்ட ஒருங்கிணைப்பாளர் கணேஷ்வரி, மாவட்ட சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர் ராமகிருஷ்ணன், ஆசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.