கைவிட்ட மகன் - தெருவில் கிடந்த மூதாட்டி – உதவிக்கரம்நீட்டிய செய்தியாளர்கள் - மீட்ட வருவாய்த்துறையினர் - கோவில்பட்டியில் நடைபெற்றநெகிழ்ச்சியான சம்பவம்

கைவிட்ட மகன் - தெருவில் கிடந்த மூதாட்டி – உதவிக்கரம் நீட்டிய செய்தியாளர்கள் - மீட்ட வருவாய்த்துறையினர் - கோவில்பட்டியில் நடைபெற்ற நெகிழ்ச்சியான சம்பவம் கோவில்பட்டியில் நடந்துள்ளது. 



கோவில்பட்டி பங்களா தெரு 4-வது தெருவை சேர்ந்தவர் சண்முகத்தாய்(75). இவர் தனது மகன் சீனியுடன் வசித்து வந்தார். முதுமை காரணமாக நோய் வாய்ப்பட்ட சண்முகத்தாயை, அவரது மகன் வீட்டுக்கு வெளியே கொண்டு விட்டுள்ளார்.



கடந்த 7 நாட்களாக இரவு, பகலாக மழையில் நனைந்தபடியும் உயிருக்கு போராடிய இருந்துள்ளார். இதை பார்த்த அப்பகுதி மக்கள் கோவில்பட்டி செய்தியாளர்களுக்கு தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு சென்ற செய்தியாளர்கள் பார்வையிட்டு, ஆடையின்றி காணப்பட்ட அவருக்கும் ஆடை கிடைக்க நடவடிக்கை எடுத்தனர். அப்பகுதி மக்களிடம் கேட்ட போது, சண்முகத்தாய் மகன் சீனி அவரை வெளியில் அனுப்பி விட்டதாகவும், மழையில் நனைந்த மூதாட்டியை மீட்டு வீட்டிற்குள் வைத்தால் அவரது மகன் தங்களுடன் சண்டைக்கு வருவதாகவும், மூதாட்டி வெயில், மழை என தெருவில் கிடந்து தவித்து வருவதாக தெரிவித்தனர்.



 இதையெடுத்து செய்தியளார்கள் உடனடியாக கோட்டாட்சியர் ஜே.விஜயாவை தொடர்பு கொண்டு விபரத்தை கூறினர். அவரது நடவடிக்கையின் பேரில் சம்பவ இடத்துக்கு வருவாய் ஆய்வாளர் மோகன் மற்றும் வருவாய்த்துறையினர் வந்தனர்.அவர்கள் விசாரணை நடத்தியதில், அந்த மூதாட்டி 2 நாட்கள் உணவருந்தவில்லை என்பது தெரியவந்தது. இதையடுத்து 108 ஆம்புலன்ஸை வரவழைத்து, மூதாட்டி சண்முகத்தாயை கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சைக்கு அனுமதித்தனர். தொடர்ந்து கோட்டாட்சியர் விஜயா மற்றும் வருவாய்த்துறையினர் மருத்துவமனைக்கு சென்று மூதாட்டி பார்வையிட்டு, அவருக்கு தேவையான சிகிச்சை அளிக்க மருத்துவர்களை கேட்டுக்கொண்டார். தொடர்ந்து அந்த மூதாட்டியை பாண்டவர்மங்கலத்தில் உள்ள முதியோர் இல்லத்தில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மூதாட்டி மீட்டு உடனடியாக சிகிச்சைக்கு அளிக்க நடவடிக்கை எடுத்த செய்தியாளர்கள்,  மூர்த்தி, ‌மகேஸ்வரன்,டேனில், மணிசங்கர், சிவராமலிங்கம், சுதன், ரவி,  கோட்டாட்சியர் மற்றும் வருவாய்த்துறையினருக்கு அப்பகுதி மக்கள் நன்றி தெரிவித்தனர்.


Previous Post Next Post