மா.புடையூர் வேளாண்மை கல்லூரியில் டெங்கு விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்த மா.புடையூரில் அமைந்துள்ள வேளாண்மை மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் டெங்கு விழிப்புணர்வு மற்றும் நிலவேம்பு கசாயம் வழங்கும் முகாம் நடைபெற்றது முகாமிற்கு வேளாண்மை கல்லூரி இயக்குனர் நடராஜன் மற்றும் கல்லூரி முதல்வர் முனைவர் தானுநாதன் தலைமை தாங்கினார் முகாமில் ஜெஎஸ்எ சித்த மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவன பேராசிரியர்கள் கலந்துகொண்டு சுற்றுப்புற சுகாதாரம் பற்றியும் டெங்கு கொசு புழு உற்பத்தி ஆகாமல் தடுக்கும் முறைகள் குறித்தும் கல்லூரி மாணவ மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர் மேலும் அனைவருக்கும் நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது முகாமினை நாட்டுநலப்பணி திட்ட ஒருங்கிணைப்பாளர் முனைவர் உதவி பேராசிரியர் ராவ்கெலுஸ்கர் மற்றும் உதவி பேராசிரியர் அனிதா ஒருங்கிணைத்தனர்