டி.என்.பாளையம் ஒன்றியத்தில் மகளிர் சுய உதவிக் குழு கூட்டமைப்பிற்கான செயல்
ஒருங்கிணைப்பு பயிற்சி
ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை சார்பில் டி.என்.பாளையம் ஒன்றிய அலுவலகத்தில் மகளிர் சுய உதவிக் குழு, கூட்டமைப்பிற்கான செயல் ஒருங்கிணைப்பு பயிற்சி 2 நாட்கள் நடந்தது. முகாமில் டி.என்.பாளையம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட அரக்கன்கோட்டை , கொங்கர் பாளையம், கொண்டையம்பாளையம், அக்கரை கொடிவேரி. உள்ளிட்ட 10 ஊராட்சிகளிலிருந்து கிராம வறுமை ஒழிப்பு சங்கம், 2 பேர், மகளிர் குழு-2 பேர், ஊரக வாழ்வாதார இயக்கம் 2 பேர், என 1ஊராட்சிக்கு 6 பேர் வீதம் 10 ஊராட்சியிலிருந்து 60 பேர் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர். பயிற்சியில் கிராம ஊராட்சியின் கடமைகள், ஊராட்சி தலைவரின் பொறுப்புகள், கிராமசபையின் நோக்கம், சமூக வரைபடம் , வள ஆதாரவரைபடம், தயாரித்தல், மத்திய மாநில அரசு செயல்படுத்தி வரும் திட்டங்கள் , மகளிர் மேம்பாடு, விழிப்புணர்வு கூட்டங்களின் நோக்கங்கள், ஆகியவை குறித்து மாவட்ட அளவிலான பயிற்றுநர்கள் மெஹராஜ், விஜயலட்சுமி, ஆகியோர் பயிற்சி அளித்தனர். பயிற்சியில் கலந்து கொண்டவர்களுக்கு சான்றிதழ்களை டி.என்.பாளையம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பஷீர் அகமது (கிராம ஊராட்சி) லதா ( வட்டார ஊராட்சி) ஆகியோர் வழங்கினார்கள். பயிற்சிக்கான ஏற்பாடுகளை மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சி துறையினர் செய்திருந்தனர்.