கீழரடி ஆராய்ச்சி முடிவுகள் விரைவில் வெளியிடப்படும் சென்னை விமான நிலையத்தில் அமைச்சர் மா.பா. பாண்டியராஜன் பேட்டி :-
கீழரடி மட்டுமின்றி தமிழ் வளர்ச்சி துறை, கலை பண்பாட்டு துறை, தொழிலியல் துறை, அருங்காட்சியகம் ஆகிய 4 துறைகளுக்கும் பல திட்டங்களுக்கு அனுமதி பெறுவதற்கான மத்திய அமைச்சர்களை சந்தித்து விளக்கப்பட்டது. உள்துறையில் இருக்க கூடிய மொழி தொடர்பான அதிகாரிகளை சந்தித்து தமிழகத்தில் புறப்படும் மற்றும் தரையிறங்கும் எல்லா விமானங்களிலும் தமிழில் அறிவிப்பு செய்யவதற்கான கோரிக்கையை ஆணை பிற்பிக்க வலியுறுத்தியும் செல்கிறேன். இதற்கான ஆணை விரைவில் பிற்பிக்கப்படும்.
கீழரடியில் அருங்காட்சியகம் அமைக்க மாநில அரசு நிதி ஒதுக்கீடு செய்து உள்ளது. மத்திய அரசின் நிதியாக ரூ.15 கோடி கேட்டு உள்ளோம்.
3 அருங்காட்சியகங்களுக்கு தரம் உயர்த்த நிதியை கேட்டு உள்ளோம். தமிழ் வளர்ச்சி துறை உலகம் முழுவதும் ஆயிரம் தமிழ் வள மையங்கள் அமைக்க ரூ.50 கோடி நிதியை கேட்டு உள்ளோம். இந்தியாவில் முக்கிய நகரங்களில் தமிழ் வள மையங்கள் அமைத்து வட இந்தியாவில் உள்ளவர்கள் தமிழை படிக்க உதவியாக இருக்கும். இந்தி பிரச்சார அமைத்தது போல் தமிழை அனைத்து இடங்களுக்கும் கொண்டு சேர்க்க நிதி உதவி அளிக்க வேண்டும். தமிழ் வளர்ச்சி திட்டங்களுக்கு தமிழக அரசு கேட்டதற்கு பரிசீலிப்பதாக கூறியுள்ளனர். நாட்டுபுற கலைஞர்களுக்கு உதவிட திட்டங்கள் செயல்படுத்த வலியுறுத்தப்பட்டது.
தமிழகத்தின் கலை பொக்சியங்கள் காட்சியகம் படுத்துவதில் மத்திய அரசின் பங்கு இருக்கும். உலக திருக்குறள் மாநாட்டை தொடங்கி வைக்கப்பட்டது. 10 நாடுகளில் இருந்து 135 அறிஞர்கள் கலந்து கொண்டனர். யூனஸ்கோவில் செட்டிநாடு இல்லங்களுக்கு அங்கீகாரம் அடுத்த ஆண்டு கிடைக்கும். கீழரடி ஆராய்ச்சி 5வது கட்டம் 3 வாரங்களில் முடிந்துவிடும். முதல் 3 கட்ட அறிக்கை வராமல் இருந்தது. ஆராய்ச்சி அறிக்கைகளை முதலமைச்சர் அனுமதி பெற்று விரைவில் வெளியிடப்படும்.