கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணத்தில் திருப்பனந்தாள் ஆழ்வார் தெருவில் சுமார் ஆயிரம் குடும்பத்திற்கும் மேல் வசித்து வருகின்றனர். இந்நிலையில் அதே தெருவில் இருக்கும் அம்மன் கோயிலில் நகையை பூசாரி திருடியதாக கூறப்படுகிறது. இதனால் இப்பகுதி மக்கள் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தனர். அதோடு பூசாரி வீட்டுக்கு சென்று பொதுமக்கள் யாக வசனம் பேசியதாக கூறப்படுகிறது..இதனால் பூசாரி அவமானம் தாங்காமல் எலி மருந்து சாப்பிட்டு விட்டு விருதாச்சலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிகிறது.
இன்று சுமார் ஒரு மணி அளவில் ஸ்ரீமுஷ்ணம் சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் எந்த ஒரு முன்னறிவிப்பும் இன்றி பூசாரி மீது நடவடிக்கை எடுக்காததை கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து வந்த காவல் ஆய்வாளர் பாலகிருஷ்ணன் துணை ஆய்வாளர் வெங்கடேசன் வைத்தியநாதன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பேச்சுவார்த்தை நடத்தியதோடு ஏற்கனவே உணர்வு இன்றி பொது மக்களுக்கு இடையூறு செய்துவந்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். பூசாரி மருத்துவமனையிலிருந்து சிகிச்சை முடிந்து வந்தபின் விசாரிக்கப்படும் என தெரிவித்தார். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.