திமுக 51-வது வட்ட கழக கட்சி அலுவலகம் திறப்பு விழா மற்றும் கொடியேற்றி கல் வெட்டு திறப்பு விழா நடைபெற்றது. இதில் திருப்பூர் வடக்கு மாவட்ட செயலாளர் க.செல்வராஜ் திறந்து வைத்தார்.
திருப்பூர் வடக்கு மாவட்ட திமுக 51-வது வட்ட கழக கட்சி அலுவலகம் திறப்பு விழா மற்றும் கொடியேற்றி கல்வெட்டு திறப்பு விழா நடைபெற்றது. அதனை தொடர்ந்து பொது மக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
திருப்பூரில் தி.மு.க. வடக்கு மாவட்டம், கருவம்பாளையம் பகுதிகழகம் சார்பில் 51-வது வட்ட தி.மு.க செயலாளர் ஆதவன் முருகேசன், பகுதிகழக அவைத்தலைவர் தம்பி.குமாரசாமி ஆகியோர் தலைமையில் திருப்பூர், தாராபுரம் ரோடு, பெரிச்சிபாளையம், ஈஸ்வர பேக்கரி நால்ரோடு அருகே புதிதாக கட்டப்பட்ட சிட்டிபாபு நினைவு மன்றம், 51-வது வட்ட தி.மு.க அலுவலகத்தை வடக்கு மாவட்ட செயலாளர் க.செல்வராஜ் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். மாநகர செயலாளர் டி.கே.டி.நாகராசன், முன்னாள் மாவட்ட பொருளாளர் மேங்கோ அ.பழனிசாமி, மாநகர நிர்வாகிகள் சிட்டி கணேசன், ஈஸ்வரமூர்த்தி, வேலுச்சாமி, செந்தூர் முத்து, சுகன்யா லோகநாதன், அய்யப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு விருந்தினராக சன் டிவி "காமெடி ஜங்சன் புகழ் ஆதித்யா டிவி தொகுப்பாளினி சந்தியா மாற்றும் ஆதித்யா டிவியில் டாடி எனக்கு ஒரு டவுட் புகழ் டவுட் செந்தில் கலந்து கொண்டு பேசினார்கள். முன்னதாக பெரிச்சிபாளையம் பஸ்டாப் அருகே பழைய கட்சி அலுவலகம் முன்பு மேளதாளத்துடன் பெண் கலைஞர்கள் நடனமாடினார். பட்டாசு வெடித்து ஆராத்தி எடுத்து கட்சி தொண்டர்கள் உற்சாகமாக வரவேற்பு அளித்தனர். அங்கிருந்து ஊர்வலகமாக புதிய கட்சி அலுவலகம் சென்று அங்கு புதிதாக கட்டப்பட்ட செ.ஆறுமுகம் நினைவு கல்வெட்டு மற்றும் அலுவலக பதாகை ஆகியவை திறந்து கட்சி கொடியேற்றிவைத்தார். அருகில் உள்ள சிலம்பு மஹாலில் தலைமை கழக பேச்சாளர் திருப்பூர் கூத்தரசன் எழுதிய "இளைஞரணியும் உதயாநிதியும்" என்ற நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது.
அதனை கட்சி நிர்வாகிகள் பெற்றுக்கொண்டனர். விழாவில் பெரிச்சிபாளையம் பகுதி கட்சி நிர்வாகிகள் சியாமளா ராஜேந்த்திரன், விஜயகுமார், தமிழ்செல்வன், சலூன் காளிதாஸ், பாலசுப்பிரமணியம், ராமசாமி, ஆட்கொண்டான், முத்துக்குமார், பி.சி.குமார், ராமர், பிரபாகரன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். விழாவில் மாவட்ட செயலாளர் செல்வராஜ் பிறந்தநாளை முன்னிட்டு 1500 பேருக்கும் மேற்பட்டவர்களுக்கு அசைவ அன்னதானம் வழங்கப்பட்டது. ஏராளமான பொது மக்கள் கலந்துகொண்டனர்.