காதலிப்பதாக ஏமாற்றி காட்டுப் பகுதிக்கு அழைத்து இளம்பெண்ணை கற்பழிக்க முயற்சி : காதலன் உட்பட இளைஞர்கள் 4 பேர் போக்ஸோ சட்டத்தில் கைது.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள விளாத்திகுளத்தில் 17 வயது இளம்பெண்ணை காட்டுப் பகுதியில் பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றதாக விளாத்திகுளம் வடக்குசெவலை சேர்ந்த ராமலிங்கம் (21) ,சுரேஷ் குமார் (19)., அழகுராஜா (19) , கன்னிராஜபுரத்தினை சேர்ந்த ராமச்சந்திரன் ( 22) , ஆகிய 4 பேரை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர் .
சூரன்குடி அருகே வடக்குசெவல் கிராமத்தை சேர்ந்தவர் சுரேஷ்குமார் (19) இவர் தூத்துக்குடியில் உள்ள தனியார் மீன் உணவு நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். இவருக்கும் அங்கு வேலை பார்த்த விளாத்திகுளம் பகுதியை சேர்ந்த இளம்பெண்னுக்கும் காதல் ஏற்பட்டுள்ளது. இதையறிந்த பெண்ணின் பெற்றோர் அப்பெண்ணை வேலையை விட்டு நிறுத்திவிட்டனர்.
இந்நிலையில் சுரேஷ்குமாருக்கும் அப்பெண்னுக்கும் தொடர்பு நீடித்துள்ளது. இதனிடையே நேற்று மாலை சுரேஷ்குமார் வேம்பார் கடற்கரைக்கு செல்வதாக கூறி அப்பெண்ணை பைக்கில் அழைத்து சென்றுள்ளார். செல்லும் வழியில் விளாத்திகுளம் வேம்பார் நெடுஞ்சாலையில் காட்டுப்பகுதியில் பைக்கை நிறுத்தி தனது நண்பர்கள் வந்து கொண்டிருப்பதாக தெரிவித்துள்ளார்.
சிறிது நேரத்தில் சுரேஷ்குமாரின் நண்பர்கள் வடக்கு செவலை சேர்ந்த ராமலிங்கம் (21). அழகுராஜ்(19) மற்றும் ராமநாதபுரம் மாவட்டம் கன்னிராஜபுரத்தை சேர்ந்த ராமச்சந்திரன்(22) ஆகியோர் வந்துள்ளனர். அப்போது அப்பெண்னுக்கும் சுரேஷ்குமாருக்கும் வாக்குவாதம் ஏற்படவே நான்கு பேரும் சேர்ந்து அப்பெண்ணை காட்டுப்பகுதிக்குள் அழைத்து சென்று பலாத்காரம் செய்ய முயன்றுள்ளனர் இதில் அப்பெண் மயக்கமடைந்து கீழே விழுந்துள்ளார். இதனையடுத்து நான்குபேரும் தப்பியோடிவிட்டனர்.
அப்பகுதியில் ஆடுமாடு மேய்த்துகொண்டிருந்தவர்கள் இளம்பெண் மயக்கமடைந்து கிடப்பது கண்டு போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். மயக்கம் தெளிந்த நிலையில் அப்பெண்ணிடம் போலீஸார் விசாரனை நடத்தினர். விசாரனையில் நான்கு இளைஞர்கள் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றது தெரியவந்தது.
இதனையடுத்து விளாத்திகுளம் அனைத்து மகளிர் காவல்நிலைய ஆய்வாளர் நாகலட்சுமி விசாரனை நடத்தி போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து சுரேஷ்குமார், ராமலிங்கம், அழகுராஜ், ராமச்சந்திரன் ஆகிய நான்கு இளைஞர்களை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். பின்னர் அவர்களை தூத்துக்குடி மகிளா நீதிமன்ற நீதிபதி குமார சரவணன் முன்பு ஆஜர்படுத்தி 4 பேரையும் சிறையில் அடைத்தனர்.