வேலூர் கலெக்டர் அலுவலகத்தில், மக்கள் குறைதீர்வு கூட்டம் நடந்தது காலை முதலே ஏராளமான பொது மக்கள் மனு அளிக்க வந்தனர். லேப்டாப் கேட்டு ராணிப்பேட்டை அரசு உதவிபெறும் பள்ளியை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட மாணவிகளும் வந்திருந்தனர்.
கலெக்டர் அலுவலக வாசலில் நீண்ட வரிசையில் மனு அளிக்க மாணவிகள் காத்திருந்தனர் அப்போது தனது தாயுடன் வந்திருந்த சிப்காட்டை சேர்ந்த ஒரு மாணவியின் கழுத்தில் இருந்த ஒன்னே கால் சவரன் தங்க நகை திடீரென மாயமானது இதனால் அதிர்ச்சியடைந்த மாணவியும் அவரது தாயும் பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை இது குறித்து அவர்கள் கலெக்டர் சண்முகசுந்தரத்திடம் சென்று நகை காணாமல் போனதாக கூறி கதறி அழுதனர் இதனை கேட்ட கலெக்டர் போலீசில் புகார் அளிக் கும்படி தெரிவித்தார் மேலும் புகாரின்பேரில் நடவடிக்கை எடுக்கும்படி போலீசாருக்கு உத்தரவிட்டார் இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.*