கடலூர் மாவட்டம் காட்டுமன்னார் கோயில் வீராணம் ஏரியிலிருந்து சம்பா நடவு பாசனத் திற்காக தண்ணீர் திறக்கும் நிகழ்ச்சி அமைச்சர் சி சம்பத் திறந்து வைத்தார். காவிரி டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையிலிருந்து கடந்த மாதம் தண்ணீர் திறக்கப்பட்டு கீழணை வந்து சேர்ந்த பின்பு வடவாறு வழியாக வீராணம் ஏரிக்கு தண்ணீர் திறக்கப்பட்டு நீர் தேக்கி வைக்கப்பட்டது. விவசாயத்திற்கு தண்ணீர் திறந்து விட வேண்டும் என வீராணம் திட்ட அலுவலகத்தில் விவசாயிகள் பொது பணி அதிகாரிகள் இணைந்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது வீராணம் ஏரியில் இருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்தனர்.
அதன்படி அமைச்சர் எம் சி சம்பத் தண்ணீர் திறந்து வைத்தார். உடன் மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன் ஆர்.டி.ஓ விசு மகாஜன் மற்றும் வீராணம் ஏரி பாசன சங்க தலைவர் பாலு ராதா மதகு தலைவி ரங்கநாயகி கடலூர் கண்காணிப்பு பொறியாளர் ரவி மனோகர் சிதம்பரம் சார்பதிவாளர் பொறுப்பு மணி மோகன் சிதம்பரம் உதவி பொறியாளர் ஞானசேகர் மற்றும் பொறியாளர்கள் விவசாய சங்க நிர்வாகிகள் பொதுமக்கள் கலந்துகொண்டு ராதா மதகு மூலம் பத்து 10 கன அடி புதிய வீராணம் மதகுகள் மூலம் 74 கன அடி வீதம் வீராணம் கரையிலுள்ள 34 மதகுகள் மூலம் 400 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் ஸ்ரீமுஷ்ணம் சிதம்பரம் சுற்றியுள்ள நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்கள் விவசாய நிலம் பாசனம் பெரும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.