பழநி மலைக்கோயிலில் தீயணைப்புத் துறையினர் சார்பில் பணியாளர்களுக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கை பயிற்சி


பழநி மலைக்கோயிலில் தீயணைப்புத் துறையினர் மூலம், பணியாளர்கள், செக்யூரிட்டி களுக்கு தீ விபத்து தடுப்பு, முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து பயிற்சி வழங்கப்பட்டது.
இந் நிகழ்வில் இணை ஆணையர் செல்வராஜ் தலைமை வகித்தார். துணை ஆணையர் செந்தில்குமார், செயற்பொறியாளர் சக்திவேல் முன்னிலை வகித்தனர்.



பழநி தீயணைப்பு நிலைய அலுவலர் கமலக்கண்ணன் தீவிபத்தின்போது மேற்கொள்ளய வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து பேசினார். தீவிபத்தில் காஸ் சிலிண்டர் அணைக்கும் முறைகள், மயங்கிவிழும் பக்தர்களை காப்பற்றுவது, தண்ணீரில் மூழ்கியவரை காப்பற்றுவது, முதலுதவி சிகிச்சை பற்றி செயல்முறை விளக்கம் செய்து காண்பித்தனர். கோயில் மேலாளர்  பொறியாளர்கள், கண்காணிப்பாளர்கள், செக்யூரிட்டிகள், அன்னதானப் பணியாளர்கள் போன்றோர்கள் பங்கேற்றனர்.


 


Previous Post Next Post