வேலூர்மாவட்டம் முழுவதும் அதிரடி சோதனையில் போலி மருத்துவர்கள் பலர் கைது


 

போலி மருத்துவர்கள் வேலூர்மாவட்டம் முழுவதும் அதிரடி சோதனையில் பலர் கைது செய்யப்பட்டதால் இனி  - அனைத்து மருத்துவர்களும் தங்கள் பதிவெண் நம்பரை கட்டாயம் பெயர் பலகையில் குறிப்பிட வேண்டும்- குட்கா போன்ற தடை செய்யப்பட்டு போதை பொருட்கள் விற்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்  -வேலூர் மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் பேட்டி:-

 

வேலூர்மாவட்டம்,வேலூர் சத்துவாச்சாரியில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வேலூர் மாவட்டத்தில் நேற்று மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்ற அதிரடி சோதனையில் 18 போலி மருத்துவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் இதுதொடர்பாக வேலூர் மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் இன்று  செய்தியாளர்களை  சந்தித்தார் அப்போது அவர் கூறுகையில் வேலூர் மாவட்டத்தில் முறையாக படிக்காமல் போலி மருத்துவர்கள் மருத்துவ சிகிச்சை மேற்கொள்வதாக ரகசிய தகவல் கிடைத்தன் பேரில் நேற்று சோதனை மேற்கொண்டோம். கடைசியாக அரக்கோணத்தில் போலி மருத்துவர் ஒருவர், டெங்கு பாதித்த சிறுவனுக்கு தவறான ஊசி செலுத்தியதால் சிறுவன் பலியானார். எனவே இதை தடுக்க 35 குழுக்கள் ஏற்படுத்தி  மொத்தம் 170 பேர்  சோதனை மேற்கொண்டனர். மாவட்டம் முழுவதும் 10க்கும் மேற்பட்ட நகரங்களில் இந்த சோதனை நடைபெற்றது நாங்கள் 47 பேரை  இலக்கு வைத்து சோதனை செய்தோம். இதில் 17 பேரை கைது செய்துள்ளோம் நாங்கள் வரும் தகவலை அறிந்து பலர் தப்பி ஓடிவிட்டனர் அந்த வகையில் 29 பேர் தப்பி ஓடி உள்ளனர் அவர்களை திரும்பவும் பிடித்து கைது செய்வோம். கைது செய்யப்பட்ட 17 பேர் மீது பொதுமக்கள் உயிருக்கு தீங்கு விளைவிக்கும் வணிகம் மேற்கொள்வது என்ற பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ராணிப்பேட்டையில் பத்தாம் வகுப்பு படித்த பெண் தனது கணவர் பெயரை வைத்து  சிகிச்சை அளித்து  வந்தார் அவரை பிடிக்கும் சமயத்தில் தப்பிவிட்டார் போலி மருத்துவர்கள் நிரந்தரமாக தடை செய்யும் வகையில் ஒவ்வொரு மருத்துவர்களும் பெயர் பலகையில், இந்திய மெடிக்கல் கவுன்சில் கொடுத்த பதிவு நம்பரை  கட்டாயம் எழுத வேண்டும் என உத்தரவிட்டுள்ளோம். பதிவெண் போடாமல் ஊசி மற்றும் மருந்துகள் கொடுக்க கூடாது என்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது கைதானவர்கள் மீண்டும் சிகிச்சை மேற்கொள்ளாத வகையில் நடவடிக்கை எடுத்து வருகிறோம் தப்பி ஓடியவர்கள் ஒரு மாதத்திற்குள் பிடிக்கப்படுவார்கள். பொதுமக்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப போதிய மருத்துவர்கள் இல்லாததால் தான் போலி மருத்துவர்கள் உருவாகின்றனர். இதேபோல் பொது மக்களின் உயிருடன் விளையாடும் அனைத்து துறைகளிலும் சோதனை மேற்கொள்ளப்படும் குறிப்பாக தடை செய்யப்பட்ட புகையிலை குட்கா விற்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.

Previous Post Next Post