கடலூர் மாவட்டம் வேப்பூர் கூட்ரோட்டில் திருச்சி சென்னை, சேலம் கடலூர் செல்லும் முக்கிய இணைப்பு சாலை உள்ளது தேசிய நெடுஞ்சாலைகள் சந்திக்கும் இடத்தில் சாக்கடை நீர் தேங்கி நிற்கிறது.
தற்போது பருவ மழை பெய்து வருவதால் மழைநீர் சாக்கடையில் கலந்து துர்நாற்றம் வீசுகிறது அதில் உற்பத்தியாகும் கொசுக்களால் பொதுமக்களுக்கு காய்ச்சல் ஏற்படுகிறது.
இதுகுறித்து தேசிய நெடுஞ்சாலை துறைக்கும் நல்லூர் ஊராட்சி ஒன்றியத் திற்கும் தகவல் தெரிவித்தோம் நடவடிக்கை எடுக்கவில்லை என்று இன்று காலை சாக்கடையை அகற்றி வடிகால் வாய்க்கால் அமைக்க கோரி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்குவட்ட குழு உறுப்பினர் நல்லூர் சாமிதுரை தலைமை தாங்கினார்.
வட்ட செயலாளர் அசோகன் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார்.
ஆர்ப்பாட்டத்தில் வட்டக்குழு சிவஞானம், கிளைச் செயலாளர்கள் முத்துசாமி, சம்பத், தூண்டிக்காரன், வீரமணி, பாண்டியன், நகர் சோமு, சேப்பாக்கம் கணேசன், பெரியசாமி, டை பி வட்டத் தலைவர் இளையராஜா, உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். பின்னர் வேப்பூர் வருவாய் ஆய்வாளர் வேப்பூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் பாஸ்கரன் தனிப்பிரிவு ஏற்றி இளையபெருமாள் நல்லூர் ஒன்றிய துணை வட்டார வளர்ச்சி அலுவலர் திலகவதி ஆகியோர் சாக்கடையை உடனடியாக அப்புறப்படுத்த படும் என்றும் வடிகால் வாய்க்கால் கட்ட தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளுக்கு பரிந்துரைக்கப்படும் என்று கூறியதால் கம்யூனிஸ்ட் கட்சியினர் கலைந்து கொண்டனர்.