கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் தனியார் மண்டபத்தில் தமிழ்நாடு அரசு சத்துணவு பணியாளர் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் ஒன்றிய தலைவர் தேசிகன்தலைமை தாங்கினார். வேல்முருகன் அன்பு ராணி எழிலரசி ஆகியோர் முன்னிலை வகித்தனர். பிச்சை பிள்ளை ஒன்றிய செயலாளர் வரவேற்புரையாற்றினார். கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு அரசு சத்துணவு ஊழியர் சங்கத்தின் மாநில தலைவர் சீனிவாசன் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.
இக்கூட்டத்தில் 2019 ஆண்டிற்கான உறுப்பினர் சேர்க்கை முடித்தல் சமையலறை மற்றும் உதவியாளர்களுக்கு பதவி உயர்வு தர வேண்டும் ஓய்வு பெற்ற சத்துணவு பணியாளர்களுக்கு சிறப்பு சேமநல நிதி வழங்க வேண்டும் சத்துணவு பணியாளர்களுக்கு முழுநேர பணியும் நிரந்தர ஊதியம் வழங்க வேண்டும் காலியாக உள்ள பொறுப்பாளர்களை சமையலர் சமையல் உதவியாளர் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும்.
கல்வித்தகுதி உள்ள சமையல் உதவியாளர்களுக்கு பொருளாதார பதவி உயர்வை வழங்க வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை அரசுக்கு முன்வைத்து இந்த கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் கலந்து கொண்ட மாவட்ட சிறப்பு தலைவர் தலைவர் உதயகுமார் சேவியர் மாவட்ட தலைவர் வைத்தியநாதன் மாவட்ட துணைத்தலைவர் ராதா மாவட்ட பொருளாளர் ஞானஜோதி மாவட்ட அமைப்பு செயலாளர் மாவட்ட துணை தலைவர் கிருஷ்ணமூர்த்தி தேவநாதன் கஸ்பார் சாரதா தனலட்சுமி ஆனந்தி ஜோதிலட்சுமி ஜெயலட்சுமி ரெஜிஸ்ட்ரி ராணி மின்னல் கொடி ஜோதிலட்சுமி கிளாம்பேர்ஸ் தமிழரசி மற்றும் சங்கத்தின் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பொதுக்கூட்டம் நடைபெற்றது இதில் 100 மேற்பட்ட உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.