இலங்கை சிறையில் உள்ள இந்திய மீனவர்களை விரைவில் விடுவிக்க நாங்கள் வலியுறுத்துவோம் - இலங்கை மீனவர்கள் 

இலங்கை சிறையில் உள்ள இந்திய மீனவர்களை விரைவில் விடுவிக்க நாங்கள் வலியுறுத்துவோம் என்று இலங்கை மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.

 


 

இலங்கையை சேர்ந்த  மீனவர்கள்  ராஜேஷ், வசீகரன், முகமது ரிகாஸ் ஆகியோர் எல்லைத்தாண்டி இந்திய பகுதிக்குள் மீன் பிடித்ததாக கூறி கடந்த 3 மாதங்களுக்கு முன்னர் வேதாரண்யம் பகுதியில்  கைது செய்யப்பட்டு புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். 

 

கைதான மீனவர்களின் தண்டனை காலம் முடிந்தும் உரிய ஆவணங்கள் இல்லாததால் இலங்கை திரும்ப முடியாமல் இருந்தனர். இந்நிலையில் , தகவலறிந்த  மாவட்ட சட்டப்பணிகள் ஆணைய செயலாளர் ஜெயந்தி   சென்னையில் உள்ள இலங்கை துணை தூதரகத்தின் உதவியுடன் ஆவணங்கள் தயார் செய்து 3 பேரும் இன்று இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். 

 

முன்னதாக சென்னை விமான நிலையத்தில் பேசிய இலங்கை மீனவர் ராஜேஷ், வழிதவறி இந்திய எல்லைக்குள் மீன் பிடிக்க வந்ததாகவும்

மூன்று மாதகாலமாக எங்களை யாரும் தொடர்பு கொள்ளாத நிலையில் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைய செயலாளர் ஜெயந்தி  தங்களை சந்தித்து உதவியதாக கூறினார். தங்களது நாட்டிற்கு திரும்ப சட்டரீதியான அனைத்து நடவடிக்கைகளுக்கும் ஜெயந்தி உதவியதாகவும் மூன்றே மாதத்தில் எங்களுக்கு சொந்த நாட்டுக்கு வழி அனுப்பி வைத்திருக்கிறார்கள் எனவும் தெரிவித்தார்.

 

இலங்கை சிறையில் உள்ள இந்திய மீனவர்களை விடுவித்து  சொந்த நாட்டிற்கு அனுப்பி வைக்க  வேண்டுமென எங்கள் நாட்டு அரசிடம் வலியுறுத்துவோம் எனவும் மீனவர்கள் தெரிவித்தனர்

Previous Post Next Post