அலகாபாத் மற்றும் இந்தியன் வங்கி இணைப்பால் வங்கிச் சேவைகளும், பணிகளும் வலுப்பெறும்-பத்மஜா சுந்துரு


அலகாபாத் மற்றும் இந்தியன் வங்கி இணைப்பால் வங்கிச்
சேவைகளும், பணிகளும் வலுப்பெறும். இருதரப்புக்கும் நல்ல பலன்கள்
கிடைக்கும் என்பது நிரூபிக்கப்படும். வங்கிகள் இணைப்பால் வங்கிக் கிளைகளோ அல்லது ஆட்குறைப்பு நடவடிக்கையோ மேற்கொள்ளப்படாது: இந்தியன் வங்கி நிர்வாக
இயக்குநர் மற்றும் முதன்மை செயல் அலுவலர் தகவல்.


இந்தியன் வங்கி மற்றும் அலகாபாத் வங்கிகள் இணைப்பால் நாடு முழுவதும் இருதரப்பிலான வங்கிச் சேவைப் பணிகள் முழுமையான அளவில் வலுப்பெறும். இந்தியன் வங்கியானது தென் இந்தியா முழுவதும் வலுவான இருப்பைக் கொண்டிருக்கிறது. இதேபோன்று அலகாபாத் வங்கியும் வட மற்றும் கிழக்கு இந்தியப் பகுதிகளில் மிகச்சிறந்த கட்டமைப்புடன் சேவையை அளித்து வருகிறது. இந்த இருவங்கிகளின் இணைப்பால் உலகத் தரத்திலான வலுவான அமைப்பையும் 266 ஆண்டுகள் அனுபவங்கள் கொண்ட வங்கிச் சேவையையும் பெற முடியும். இந்தியன் வங்கியானது 112 ஆண்டுகள் பழமையானதாகும். இதேபோன்று அலகாபாத் வங்கி 154 ஆண்டுகள் வயதுடையது. இந்த இரண்டு ஆண்டுகளையும் கூட்டினால் 266 ஆண்டுகள் அனுபவம் கிடைத்திடும். இந்தியன் வங்கி மற்றும் அலகாபாத் ஆகிய இரு வங்கிகளும் சிபிஎஸ் எனப்படும் கோர் பேங்கிங் சிஸ்டம் அமைப்பினை ஒரே மாதிரியான தொழில் நுட்பத்திலேயே பயன்படுத்துகின்றன. எனவேஇ வங்கிக் கிளைகள் இணைப்பு நடவடிக்கை விரைந்து மேற்கொள்ளப்பட்டு அதன்மூலமாக உடனடி பலன்கள் கிடைக்கும். இந்தியன் வங்கி மற்றும் அலகாபாத் வங்கி இணைப்பு நடவடிக்கையால் இந்தியாவின் ஏழாவது மிகப்பெரிய பொதுத்துறை வங்கியாக அது உருவெடுத்துள்ளது. இதன்மூலம் வங்கியின் வர்த்தகமானது ரூ.8.08 கோடியாக இருக்கும். இது வங்கிகள் இணைப்புக்கு முன்பாக இந்தியன் வங்கியின் வர்த்தக மதிப்பை விட 1.9 மடங்கு அதிகமாகும். 6 ஆயிரத்து 100 கிளைகளுடன் 43 ஆயிரம் ஊழியர்களுடன் இணைப்பாகச் செயல்படும். இதுகுறித்து இந்தியன் வங்கியின் நிர்வாக இயக்குநர் மற்றும் முதன்மை செயல் அலுவலர் பத்மஜா சுந்துரு கூறியதாவது:-


வங்கிகள் இணைப்பை முழுமையாக முடித்து இந்தப் பணிகளை மேற்கொண்ட
முதல் வங்கி என்ற நிலையைப் பெறுவோம். மேலும் வாடிக்கையாளர்களுக்கு
மிகச்சிறந்த சேவையை என்றும் போல் வழங்க உறுதி பூண்டுள்ளோம். வங்கிகள்
இணைப்பின் பலன்கள் மக்களைச் சென்றடைந்து அதன்மூலமாக வருங்காலத்தில்
மிகச்சிறந்த சர்வதேச தரத்திலான வங்கி என்ற உன்னத நிலையை அடைவோம்.
வங்கிகள் இணைப்பால் மிகச்சிறந்த சேவைகளை அளித்திட முடியும். தொழில்நுட்ப ரீதியான அம்சங்கள் மனித வளம் ஆகியன இரு வங்கிகளுக்கும் பொதுவான
அம்சங்களாக இருப்பதால் அவற்றை இணைப்பதில் எந்தவித சிக்கல்களும் இருக்காது.
வங்கிகள் இணைப்புக்குப் பிறகு வணிகம் வர்த்தகம் மேம்பாடு லாபம் ஆகியன
மட்டுமே முதன்மை நோக்கமாக இருக்காது. ஊழியர்களின் நலன் அவர்களது மேம்பாடு அவர்களை மேலாண்மை செய்வது போன்ற பணிகளிலும் கவனம் செலுத்துவோம். சிறு குறு மற்றும் நடுத்தரத் தொழில்கள் துறை வேளாண்மைத் துறை ஆகியவற்றில் இரு வங்கிகளும் தத்தமது பகுதிகளில் மிகச்சிறந்த அளவில் பங்களிப்பைச் செலுத்த முடியும் என்றார். வங்கிகள் இணைப்பு காரணமாக வங்கிக் கிளைகள் மூடப்படுவதோ அல்லது
ஆட்குறைப்பு செய்யும் நடவடிக்கைகளோ மேற்கொள்ளப்படாது. இரு வங்கிகளைச்
சேர்ந்த ஊழியர்களும் இணைந்து பணியாற்றி சக்தி வாய்ந்த மனித ஆற்றில் என்பதை
உறுதிப்படுத்தும். வங்கிகள் இணைக்கப்படுவதன் மூலமாக நிறைந்த வளர்ச்சியும் ஊழியர்களுக்கு வாய்ப்புகளை கற்றுக் கொள்ளும் நிலையும் ஏற்படும். எனவே இரு வங்கிகள் இணைக்கப் படுவதால் அவை இரண்டுக்கும் அதில் பணியாற்றும் ஊழியர்களுக்கும் லாபமும் பலன்களுமே ஏற்படும். வித்தியாசமான மனித ஆற்றல்களை ஒரு சேர வாடிக்கையாளர்களுக்குக் கொடுத்திட இயலும். வங்கிகளுக்கு வரும்
வாடிக்கையாளர்களுக்கும் டிஜிட்டல் முறையில் பணப் பரிவர்த்தனை செய்யும்
நடவடிக்கைகளிலும் இந்தியன் வங்கி மிகச்சிறந்த சேவைகளை அளித்து வருகிறது.
இந்தச் சேவைகளின் மூலமாக இந்தியாவில் முன்னணி வங்கிகளில் ஒன்றாக
விளங்க தொடர்ந்து பணியாற்றி வருகிறது. மத்திய அரசு இந்திய ரிசர்வ் வங்கி முதலீட்டாளர்கள் வாடிக்கையாளர்கள் பணியாளர்கள் மற்றும் இதர பங்குதாரர்கள் மூலமாக நாங்கள் அதிவிரைவான வளர்ச்சியை எட்டுவோம் என்று எதிர்பார்க்கிறோம். மேலும்இ வருங்காலத்தில் சக்திவாய்ந்த பொதுத்துறை நிறுவன வங்கிகளில் முதல் ஐந்து இடங்களில் ஒன்றாக இந்தியன் வங்கி திகழும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.


Previous Post Next Post