பழனியில் வழக்கறிஞர்கள் காவல் துறையால் புறக்கணிக்கப்படுவதை கண்டித்து ஒருங்கிணைந்த நீதிமன்ற நுழைவாயில் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
பழனி ஒருங்கிணைந்த நீதிமன்ற நுழைவாயில் முன்பு அடிவாரம் காவல் நிலையத்தில் சார்பு ஆய்வாளராக பணிபுரிந்து வரும் வாசுதேவன் என்பவர் வழக்கறிஞரை மரியாதை குறைவாகவும் அவமதிப்பு ஏற்படும் வகையில் நடந்துகொண்டார் எனவும் அவரை கண்டித்து மற்றும் திருச்செங்கோட்டில் காவல்துறை மாவட்ட துணை கண்காணிப்பாளராக பணிபுரிந்து வரும் சண்முகசுந்தரம் தனது அலுவலகத்திற்க்கு வரும் வழக்கறிஞர்களை முறைகேடான வார்த்தைகளை பயன்படுத்தி பேசுவதாகவும் வழக்கறிஞர்களை தரம் தாழ்த்தி நடத்துவதாகவும் காவல் நிலையத்திற்கு வரும் வழக்கறிஞர்களுக்கு உரிய மரியாதை கொடுக்கப்படாமல் அவமதிப்பு செய்வதாக கூறி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் இரண்டு நிகழ்வுகளிலும் சம்பந்தப் பட்ட காவல்துறை அதிகாரிகளை உடனடியாக பணியிடை நீக்கம் செய்ய வேண்டும் எனவும் இனிவரும் காலங்களில் காவல் நிலையங்களுக்கு வரும் வழக்கறிஞர்களுக்கு உரிய மரியாதை அளிக்கவும் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின் மூலம் கோரிக்கை வைத்தனர். மேலும் காவல்துறைக்கு எதிரான கடுமையான பல கோஷங்களை எழுப்பி தங்களது கண்டனத்தை பதிவு செய்தனர். மேலும் வழக்கறிஞர் சங்கத்தின் தலைமைப் பொறுப்பாளர்கள் கூறுகையில் தமிழ்நாட்டில் தொடர்ந்து காவல் நிலையங்களிலும் மாவட்ட காவல் துறை அலுவலகங்களிலும் வழக்கறிஞர்கள் முதல் தகவல் அறிக்கையை தெரிந்து கொள்ள செல்லும் பொழுது அங்கு காவல்துறை அதிகாரிகளால் வழக்கறிஞர்களுக்கு தொடர்ந்து அவமதிப்பு மற்றும் மரியாதை குறைவு போன்ற பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றது. வழக்கறிஞர்கள் வழக்கின் தன்மை அறிந்து நீதியை நிலைநாட்ட போராடி வரும் ஒரு துறையாகும் எனவே இனிவரும் காலங்களில் காவல்துறை அதிகாரிகள் காவல் நிலையங்களுக்கு வரும் வழக்கறிஞர்களுக்கு உரிய தகவல்களும் மரியாதையும் கொடுக்க வேண்டும் என்று இந்த ஆர்ப்பாட்டத்தின் மூலம் கண்டன உரை நிகழ்த்தினர்.மேலும் இந்த ஆர்ப்பாட்டத்தில் 50க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் கலந்துகொண்டு காவல்துறைக்கு எதிராகவும் தவறு செய்த காவலர்களுக்கு உடனடியாக துறைரீதியான தண்டனை வழங்க வேண்டும் என்றும் பல்வேறு கோஷங்களை எழுப்பினர்.