கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் முக்கிய கடை வீதி பகுதியில் அமைந்திருக்கும் ஒரு தனியார் பள்ளியில் சிறு குறு விவசாயிகள் சங்கத்தின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.


இந்நிகழ்விற்கு சிறு குறு விவசாய சங்கத் தலைவர் இதயத்துல்லா தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் இளைய அன்பழகன் சிறு குறு விவசாயிகள் சங்கம் விளக்க உரையாற்றினார் செந்தில்குமார்.
சிறு குறு விவசாயிகள் சங்கம் துணைத்தலைவர் வரவேற்புரையாற்றினார். அருள், கணேசன், கலைவேந்தன், ரவிக்குமார், பாலு உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.
ஜாகிர் உசேன் கார்த்திகேயன் விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் மாவட்ட துணை அமைப்பாளர் விமல் ராஜ் உள்ளிட்டோர் கருத்துரை செய்தனர். இறுதியாக ஜாஹிர் உசேன் நன்றி கூறினார்.