சத்தியமங்கலத்தில் உள்ள பண்ணாரிஅம்மன் பொறியியல் கல்லூரியில் நெகிழிக்கு மாற்றாக நூல் பைகள் தயாரிப்பு பணியில் கல்லூரி மாணவ, மாணவிகள் ஈடுபட்டனர். கல்லூரியின் ஆடை வடிவமைப்பு துறையின் சார்பில், ஒரே நாளில் 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் ஈடுபட்டு, நூல் பைகள் தயாரித்து, சாதனை புரிந்தனர். மத்திய, மாநில அரசுகளின் வேண்டுகோளுக்கிணங்க, பிளாஸ்டிக்கை பொருட்களை பயன்படுத்தக்கூடாது என்ற கொள்கையில், நூல்களை கொண்டு, இன்று காலை முதல் நூல் பைகள் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டனர்.
இது குறித்து மாணவர்கள் கூறும் போது, பிளாஸ்டிக்கினால் சுற்றுப்புறச்சூழல் மாசடைவதை தடுத்து நிறுத்த வேண்டும் என்ற கொள்கையில், ஒரே நேரத்தில் நூல் பைகள் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளோம். பிளாஸ்டிக் பைகளை ஒரு சில நாட்கள் மட்டுமே உபயோகப்படுத்த முடியம் என்ற சூழ்நிலையில், நாங்கள் தயாரித்துள்ள நூல் பைகள் நீண்ட நாட்கள் உழைக்கக் கூடியது. சுற்றுச்சூழல் மாசடையாது என்ற நோக்கத்தோடு, சாதனையாகவும் நிகழ்த்தி உள்ளோம். இண்டியா புக் ஆப் ரெக்கார்டு என்ற நிறுவனத்தில் எங்கள் தயாரிப்பு சாதனையாகவும் இடம் பெற உள்ளது எனவும் மாணவர்கள் கூறினர்.