வேப்பந்தட்டை தாலுகாவில்  பயிராய்வு பணிகளை இணையவழி கணினியில் பதிவு செய்யும் நடைமுறைகள் குறித்து கலெக்டர் வே.சாந்தா நேரில் ஆய்வு 


 

பெரம்பலூர்மாவட்டம் வேப்பந்தட்டை தாலுகா பகுதியில் பயிராய்வு பணிகளை இணையவழி கணினியில் பதிவு செய்யும் நடைமுறைகள் குறித்து மாவட்ட ஆட்சியர்சாந்தா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார் அதன் விவரம் பின்வருமாறு:

 

பயிராய்வு பணிகளை இணையவழி கணினியில் பதிவு செய்யும் நடைமுறைகள் குறித்துவேப்பந்தட்டை வட்டம் வெண்பாவூரில் விவசாயிகளின் நிலங்களில் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார் அதனைத்தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் கூறியதாவது.
    பெரம்பலூர் மாவட்டத்தில் இணைய வழியாக அடங்கல் பதிவேட்டில் விபரங்கள் பதிவு செய்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளது. மேற்படி அடங்கல்  பதிவேட்டில் பயிர்பதிவு கிராம நிர்வாக அலுவலர்களால் மட்டுமே மேற்கொள்ளப்பட்ட பணியானது தற்போது விரிவுபடுத்தப்பட்டு விவசாயிகளும் தங்கள் நிலத்தில் பயிரிடப்படும் பயிர்கள் குறித்தான விபத்தினை இணையவழி கணினியில் பதிவு செய்துகொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது.   விவசாயிகளால் இணைய வழியாக கணினியில் பதிவு செய்யப்பட்ட விபரம் சம்பந்தப்பட்ட கிராம நிர்வாக அலுவலரிடம் உறுதி செய்து கொள்ளவும் தவறு ஏதேனும்  இருப்பின் வருவாய் ஆய்வாளர் நிலையில் திருத்தம் செய்துகொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் பயிராய்வு பணியினை கிராம நிர்வாக அலுவலர்கள் 100 சதவீதம் சர்வே எண் வாரியாகஆய்வு செய்து இணையவழி கணினியில் பதிவு செய்யப்படும். மேற்படி பணியினை வருவாய் ஆய்வாளர் மண்டல துணை வட்டாட்சியர் வருவாய் கோட்டாட்சியர் மற்றும்  மாவட்ட வருவாய் அலுவலர்ஆகியோர் மேற்பார்வை செய்து அதனை உறுதி செய்வார்கள் இதில் வேறுபாடுகள் ஏதேனும் இருப்பின் திருத்தங்கள்  செய்யவும் வழி வகை செய்யப்பட்டுள்ளது. அடங்கல் பதிவேடு நகல் பெற தற்போது கிராம நிர்வாக அலுவலரையே விவசாயிகள் சார்ந்து உள்ளனர் இந்த இணையவழி அடங்கல் பதிவேடு திட்டத்தின் மூலம் விவசாயிகள் கிராம நிர்வாக அலுவலரை அணுகாமல் எளிதாக தாங்கள் இருக்கும் இடத்தில் உள்ள பொதுமக்கள் சேவை மையத்தில் உடய கட்டணம் செலுத்தி அடங்கல் நகலினை பெற்று பயன்பெறலாம். என தெரிவித்தார். அதனைத் தொடரந்துது பொதுப்பணித்துறை  நீர்வள ஆதார அமைப்பின் கட்டுப்பாட்டிலுள்ள வெண்பாவூர் ஏரியில் ரூ.21 இலட்சம் மதிப்பீட்டில் குடிமராமத்து திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வரும் புதிதாக அமைக்கப்பட்டு வரும் பாசன மதகுகள் அமைக்கும் பணி, கரைகளை பலப்படுத்தும் பணி, புதிதாக அமைக்கப்பட்டு வரும் கலிங்கு கட்டுமானப் பணி மற்றும் ஏரியை தூர் வாரி சீரமைக்கும் பணிகளை மாவட்ட ஆட்சியர்நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார் மேலும் பணிகளை குறித்த காலத்திற்குள் முடித்து விவசாயிகளின் பயன்பாட்டிற்கு கொண்டு வர தொடர்புடைய அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். ஆய்வின் போது மருதையாறு நீர் பாசன உதவி செயற்பொறியாளர் பிரபாகரன், மற்றம் அலுவலர்கள் உடன் சென்றனர்.

 

 

Previous Post Next Post