நாகை மாவட்டம் கொள்ளிடம் வட்டார கல்வி அலுவலகம் முன்பு ஜாக்டோஜியோ சார்பில் தொடக்கக் கல்வியை அழிக்கின்ற அரசாணை 145 ஐ உடனடியாக திரும்ப பெற வேண்டும். ஆசிரியர்கள் அரசு ஊழியர்கள் பணியாளார்கள் மீது எடுக்கப்பட்டுள்ள ஒழுங்கு நடவடிக்கைகள் மற்றும் பணி மாறுதல்களை ரத்து செய்ய வேண்டும் காவல் துறையால் போடப்பட்டுள்ள குற்ற வழக்குகளை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட 8 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்ற மாவட்டத்தலைவர் கமலநாதன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கொள்ளிடம் வட்டார ஆசிரியர்கள் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க தலைவர் சண்முகசுந்தரம் தலைமையாசிரியர்கள் வெங்கடேசன், மதிவாணன், அசோக்குமார் , பாலகிருஷ்ணன், மணிவண்ணன், தங்கசேகர் உள்ளிட்ட பலர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.